Actor Vishal: வெளியானது விஷாலின் ரத்னம் பட ட்ரெயிலர்.. என்னது இவ்ளோ கெட்ட வார்த்தைகளா?
சென்னை: நடிகர் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ரத்னம் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின்மூலம் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். முன்னதாக தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்களில் இணைந்திருந்த இந்த கூட்டணி ரத்னம் படம் மூலம் அதிரடி ஆக்ஷன் களத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
கடந்த ஆண்டில் விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.

நடிகர் விஷால்: நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. படத்தில் எஸ்ஜே சூர்யா -விஷால் காம்பினேஷனை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பாக்கியிருந்தார். டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஹரி கூட்டணியில் இணைந்து ரத்னம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால். இந்தப் படம் வரும் 26ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது.

ரத்னம் பட ட்ரெயிலர்: ரத்னம் படத்தின் கிளிம்ப்ஸ், போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலரை இன்றைய தினம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஷாலும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இந்த ட்ரெயிலரை வெளியிட்டு உற்சாகம் தெரிவித்துள்ளார். மார்க் ஆண்டனி படத்திலிருந்து ரத்னம் படத்திற்கு தன்னுடைய மாற்றம் மிகப்பெரியது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இயக்குநர் ஹரியுடன் தான் இணையும் மூன்றாவது படம் ரத்னம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தாமிரபரணி மற்றும் பூஜை படங்கள் தங்களது காம்போவில் வெளியானதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
விஷால் உற்சாகம்: மேலும் தன்னுடைய டார்லிங் தேவிஸ்ரீ பிரசாத்துடனான தன்னுடைய முதல் கூட்டணி படம் இது என்பது குறித்தும் விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் விஷுவல்ஸ் மற்றும் படத்தின் கதைக்களம் கண்டிப்பாக ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். படத்தில் நாயகி பிரியா பவானி சங்கரை காக்கும்வகையில் விஷால் கையில் அரிவாளை ஏந்துவதாக காணப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்தில் பல கெட்டவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதை இந்த ட்ரெயிலர் மூலமே உணர முடிகிறது. அனைவரும் சரமாரியாக கெட்ட வார்த்தைகள் பேசுகின்றனர்.
ட்ரெயிலரில் அதிக கெட்ட வார்த்தைகள்: ஹரி படம் என்றாலே அதிரடி ஆக்ஷன் படமாக அமையும். அதிலும் அவருடன் விஷால் இணைந்துள்ளதால் இந்தப் படம் கண்டிப்பாக அதிகமான ஆக்ஷன் காட்சிகளை கொண்ட படமாகவே அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதை வெளிப்படுத்தும்வகையில் படத்தின் ட்ரெயிலரிலும் அதிகமான ஆக்ஷன் காட்சிகளுடன் கூடவே கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. இது ரசிகர்களுக்கு ஷாக்களிக்கும்வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











