Vishal 34: டாக்டருடன் மோதும் துப்பாக்கி.. விஷால் 34 படத்தின் டைட்டில் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் விஷால் மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகி வருகிறது விஷால் 34 படம்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

Actor Vishals Vishal 34 movie title to be revealed on december 1st

முன்னதாக ஹரியுடன் விஷால் பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் இந்தப் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஷால்: நடிகர் விஷால் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஷாலுடன் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் நடித்திருந்தார். பீரியட் படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். டைம் ட்ராவலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியிருந்தது. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த இந்தப் படம் வசூலிலும் சாதனை புரிந்தது.

விஷால் 34 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹரியுடன் விஷால் தன்னுடைய விஷால் 34 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். காரைக்குடி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

டிசம்பர் 1ல் டைட்டில் அறிவிப்பு: இதனிடையே, இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு வரும் டிசம்பர் 1ம் தேதி டைட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக நடிகர் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முன்னதாக படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளதாக வித்தியாசமான போஸ்டருடன் அவர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் ஷாட் வெளியாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மார்க் ஆண்டனி படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

துப்பாக்கியுடன் மோதும் ஸ்டெத்: முன்னதாக மருத்துவர்களின் ஸ்டெத் மற்றும் துப்பாக்கி இரண்டும் பின்னி பிணைந்திருக்கும் வகையில் போஸ்டரை வெளியிட்ட விஷால், தற்போது இந்த அறிவிப்பில் ஸ்டெத் மற்றும் துப்பாக்கி இரண்டும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும்படியான போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதிரடி ஆக்ஷன் களத்தில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகவுள்ள நிலையில், மருத்துவ சம்பந்தமான பிரச்சினைகளை படம் சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தின்மூலம் இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக விஷால் இணைந்துள்ளார். முன்னதாக தாமிரபரணி மற்றும் பூஜை படங்களில் இணைந்திருந்த இந்தக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த இரு படங்களும் சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது விஷால் 34 படமும் இந்தக் கூட்டணிக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X