என் மகள் பயந்துவிட்டாள்.. துபாய் வான்வெளியில் ஏவுகணைகள்! பதற்றத்துடன் நடிகர் விஷ்ணு மஞ்சு வீடியோ

துபாய்: ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள், குறிப்பாக ஈரானுக்கு அருகில் உள்ள நாடுகள் கண்டனங்களை கூட்டாக வெளியிட்டு வருகிறது. இதனால் சர்வதேச அளவில் மிகப்பெரிய பதற்றம் நிலவி வருகிறது.

இந்த தாக்குதல்களால் துபாய், அபுதாபி, கத்தார் போன்ற நாடுகள் அவர்களின் வாழ் வழி போக்குவரத்தை மொத்தமாக மூடிவிட்டன. இதனால் கமர்ஷியல் பயன்பாட்டுக்கான பயன்பாடு மொத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இப்படி இருக்கையில் துபாயில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வீட்டில் ஏற்கனவே உள்ள பொருட்களைக் கொண்டே மறு அறிவிப்பு வரும் வரை சமாளிக்க முயற்சி செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் மக்களின் மொபைல்களுக்கு எமர்ஜென்சி அலர்ட் அரசு தரப்பில் இருந்து இயல்பாகவே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Actor Vishnu Manchu Witnesses Missile Strikes in Dubai Shares Terrifying Experience as Tensions Rise

இப்படி இருக்கையில் துபாயில் இருக்கும் நடிகரும் இயக்குநருமான விஷ்ணு மஞ்சு தனது எக்ஸ் பக்கத்தில் தனது தலைக்கு மேல் பறந்த ஏவுகணையை வீடியோவாக பதிவு செய்து, பகிர்ந்துள்ளார். மேலும், " இன்று இரவு துபாயில் எனது குடும்பத்தினருடன் இருக்கிறேன். அப்போது வானில் ஏவுகணைகள் சீறிப்பாய்வதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அந்த ஏவுகணைகளை இடைமறித்து தாக்குகிறார்கள். அப்படியான தாக்குதல்களால் ஏற்பட்ட பயங்கரமான சத்தம், நாங்கள் இப்போது உள்ள எங்கள் துபாய் வீட்டையே உலுக்கியது. எனது மகள் ஆயரா அந்தச் சத்தத்தைக் கேட்டு மிகவும் பயந்து நடுங்கிவிட்டாள்.

உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். எந்தக் குழந்தையும் தனது வீட்டின் மேலே போரின் சத்தத்தைக் கேட்டு வளரக் கூடாது. பொதுமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஐக்கிய அரபு அமீரக (UAE) பாதுகாப்புப் படைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இதுபோன்ற தருணங்களில் தான் வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. மனவலிமைக்கும் அமைதிக்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஹர் ஹர் மகாதேவ்!" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவும் அவர் பகிர்ந்துள்ள வீடியோவும் பலரது கவனத்தை ஈர்த்திருந்தாலும், பலரும் இந்த தாக்குதலால் அப்பாவி பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என்று தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X