Kannappa Box Office: கண்ணப்பா திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியானத் திரைப்படம் 'கண்ணப்பா'. பான் இந்திய திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் நேற்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தின் முதல் வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

இந்திய சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு புராண மற்றும் சரித்திர திரைப்படம் தான் 'கண்ணப்பா' சிவபெருமானின் தீவிர பக்தரான கண்ணப்ப நாயக்கனாரின் வாழ்க்கையை மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை 'மகாபாரதம்' தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில், விஷ்ணு மஞ்சு கண்ணப்பராகவும், நடிகர் பிரபாஸ் ருத்ரா என்னும் வேடத்திலும், மோகன்லால் கிராதகா என்கிற கதாபாத்திரத்திலும், அக்ஷய் குமார் சிவபெருமானாகவும், காஜல் அகர்வால் பார்வதி தேவியாகவும், சரத்குமார் நாதநாதூடு கதாபாத்திரத்திலும், மதுபாலா பன்னகா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

Kannappa Vishnu Manchu box office
Photo Credit:

கண்ணப்பா: படத்தின் கதை என்ன வென்றால,இரண்டாம் நூற்றாண்டில் மலைப்பகுதியின் இனக்குழுவின் தலைவராக இருக்கும் சரத்குமார். தனது மகன் திண்ணப்பாவை இறைவனுக்கு பலி கொடுக்கிறார். இதைப்பார்த்த திண்ணப்பா, தெய்வத்திற்கு ஏன் உயிர்பலி கொடுக்க வேண்டும் என மனத்திற்கு எண்ணம் வர, தெய்வத்தின் மீது நம்பிக்கையை இழக்கிறார். இதனால், கடவுள் இல்லை, அது வெறும் கல் என்கிறான். இதே எண்ணத்துடன் வளரும் திண்ணப்பா, கடவுள் மீது அதிக வெறுப்புட கொண்டவனாக இருக்கிறான். வாயு லிங்கத்தை மற்றவர்கள் யாரும் பார்த்திடாத அளவுக்கு தான் மட்டுமே அந்த சிவலிங்கத்துக்கு பூஜை செய்ய வேண்டும் என மகாதேவ சாஸ்திரிகள் அந்த லிங்கத்தை பாதுகாத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், கடவுள் மீது வெறுப்புடனும் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் திண்ணப்பன் எப்படி கண்ணப்பனாக மாறி தன் கண்ணையே சிவனுக்கு கொடுத்து பக்திமானாக மாறுகிறான் என்பதும் தான் கண்ணப்பா திரைப்படத்தின் கதை.

முதல் நாள் வசூல்: புராண கதையாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுவும் பிரபாஸ் கேமியோ கதாபாத்திரத்தில் ருத்ராக வரும் காட்சி தியேட்டரில் கைதட்டல் பெறுகிறது. அக்ஷய குமாரின் சிவன் வேடம் கம்பீரமாக இருக்கிறது. நேற்று தியேட்டரில் வெளியான இந்த படத்திற்கு மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் ₹9 கோடியாகும். இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X