Vishnu Vishal & Amir khan: மழை வெள்ளத்தில் சிக்கிய விஷ்ணு விஷால் -அமீர்கான்.. பத்திரமாக மீட்பு!

சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை அதிகமான அளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. பலர் தங்களது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமில்லாமல் சில அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

போர்க்கால மீட்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ள போதிலும் அதிகமான பாதிப்புகளை பல இடங்களில் உள் மக்கள் சந்தித்து வருகின்றனர்.

Actor Vishnu vishal & Amir khan rescued from chennai floods

மிக்ஜாம் புயல்: சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மிக்ஜாம் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக மிக்ஜாம் புயலையடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் பாதிப்பு தமிழகத்தில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுததியுள்ள நிலையில் நாளைய தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்பில் சென்னை: சென்னையில் இந்தப் புயலின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அபார்ட்மெண்ட் வாசிகள் கூட இந்தப் புயலின் பாதிப்புகளால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இன்றைய தினம் மழை குறைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து மீட்பு பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. பல இடங்களில் மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர்.

மழை பாதிப்பு: தனியார் தொண்டு நிறுவனங்களும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை பெய்துள்ள மழை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மழை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறித்து விஷால், விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்களும் தங்களது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளனர். விஷ்ணு விஷால் இந்த மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் உதவி வேண்டியிருந்தார்.

வெள்ளத்தில் சிக்கிய விஷ்ணு விஷால்: காரப்பாக்கத்தில் விஷ்ணு விஷால் வீடு உள்ள நிலையில், வீட்டிற்குள் மழை நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கரண்ட், வைஃபை இல்லாத நிலையில் போன் சிக்னல் மொட்டை மாடியின் ஒரு இடத்தில் மட்டுமே கிடைப்பதாகவும் கூறி அவர் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். உதவி கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். சென்னை மக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.

தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை: இந்நிலையில் காரப்பாக்கம் பகுதியில் சிக்கிய மக்களை தமிழக தீயணைப்புத் துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் தன்னுடைய தாயாரின் சிகிச்சைக்காக கடந்த இரு மாதங்களாக சென்னை காரப்பாக்கத்தில் வீடு எடுத்து தங்கியிருந்த நடிகர் அமீர்கானையும் தீயணைப்புத் துறை வீரர்கள் பத்திரமாக போட் மூலம் மீட்டுள்ளனர். இதையடுத்து தமிழக தீயணைப்பு துறையினருடன் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X