வரும் 22ஆம் தேதி காதலியை கரம்பிடிக்கிறார் விஷ்ணு விஷால்.. வைரலாகும் திருமண அழைப்பிதழ்!
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் வரும் 22ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான ஜூவாலா கட்டாவை திருமணம் செய்யவுள்ளார்.
Recommended Video
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.
தனக்கான கதைகளை தேர்வு செய்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.

ஆண் குழந்தை
அவரது தனித்துவமான நடிப்புக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏற்கனவே தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இரண்டாவது காதலி
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்ததற்கு காரணம் அவருக்கும் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுக்கும் இடையிலான காதலே என்று கூறப்பட்டது.

திடீர் நிச்சயதார்த்தம்
இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியானது. இதனை தொடர்ந்து ஜூவாலாவுடனான காதலை ஒப்புக் கொண்டார். ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளில் நள்ளிரவில் அவருக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார் விஷ்ணு விஷால்.

பேச்சுலரேட் பார்ட்டி
அண்மையில் ஹைதராபாத்தில் ஆரண்யா படத்தின் ப்ரி வியூ நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால் ஜூவாலாவை திருமணம் செய்துக் கொண்டு விரைவில் தெலுங்கு மாப்பிள்ளை ஆக போகிறேன் என்றார். இந்நிலையில் ஜூவாலா கட்டாவும் தனது தோழிகளுக்கு பேச்சுலரேட் பார்ட்டி கொடுத்தார்.

திருமண அழைப்பிதழ்
அந்த போட்டோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இதனால் விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டா திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தங்களின் திருமண அழைப்பிதழை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வாழ்க்கை ஒரு பயணம்
அதன்படி வரும் 22ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விஷ்ணு விஷால், வாழ்க்கை ஒரு பயணம்.. அதை தழுவிக்கொள்ளுங்கள்.. நம்பிக்கையுடன் பாய்ந்து செல்லுங்கள்.. எப்போதும் போல உங்களின் அன்பும் ஆதரவும் தேவை என பதிவிட்டுள்ளார்.

திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்படுவார்கள் என தெரிகிறது. விஷ்ணு விஷாலின் இந்த பதிவையும் திருமண அழைப்பிதழையும் பார்த்த திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











