Just In
- 33 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 1 hr ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. காதலர் தினத்தில் காதலியுடன் ஜாலி.. வெளுத்தது பிரபல நடிகரின் சாயம்!

சென்னை: காதலர் தினத்தில் பிரபல நடிகருக்கு அவரது காதலி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஏராமான படங்களில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால்.
கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான, ராட்சசன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான விருதுகளை குவித்தது அப்படம்.
வெறித்தனம் ரெக்கார்டு முறியடிப்பு.. மாஸ் காட்டும் குட்டி ஸ்டோரி.. யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!

எஃப்ஐஆர் டீசர்
விஷ்ணு விஷால் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார். அவர் நடித்து தயாரிக்கும் எஃப்ஐஆர் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளை சேர்ந்த 4 பிரபலங்கள் டீசரை வெளியிட்டனர். இந்த டீசரும் நல்ல வரவேற்பை பெற்றது.

மனைவி விவாகரத்து
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் தான் காதலித்து திருமணம் செய்த தனது மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்தார். ஒரு மகன் உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சட்டப்படி விவாகரத்து செய்தார். இதனை நடிகர் விஷ்ணு விஷாலே தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
|
நெருக்கமான போட்டோக்கள்
பிரபல பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷாலுக்கு ஏற்பட்ட தொடர்பே விவாகரத்து வரை சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் அதுதொடர்பாக விஷ்ணு விஷால் பதில் ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இருப்பினும் இருவரும் இரவு விருந்தில் பங்கேற்கும் போட்டோக்களும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாகரத்துக்கு காரணம்
விஷ்ணு விஷாலின் பிறந்த நாளுக்கு கூட ஜூவாலா கட்டா அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஜூவாலா கட்டாவை திருமணம் செய்யவே நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்ததாக தகவல் வெளியானது.

கட்டிப்பிடித்து முத்தம்
ஆனால் அதுகுறித்து இருவருமே வாய் திறக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த காதலர் தினத்தை விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் கொண்டாடியுள்ளனர். அப்போது ஜூவாலா கட்டா விஷ்ணு விஷாலை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

லைக் செய்த நடிகர்
முத்தம் கொடுக்கும் அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் ஜூவாலா கட்டா. மேலும் மை வேலன்டைன் என்றும் அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை நடிகர் விஷ்ணு விஷால் லைக் செய்துள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதல் உறுதி
இதுவரை இருவரின் காதல் குறித்தும் அரசல் புரசலாக தகவல் பரவி வந்தது. ஆனால் இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில் காதலர் தினமான நேற்று இருவரும் தங்களின் காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.