இதுதான் சரியான தருணம் என உணர்ந்தேன்.. திடீர் நிச்சயதார்த்தம் குறித்து மனம் திறந்த விஷ்ணு விஷால்!
சென்னை: காதலியின் பிறந்தநாளில் மிக எளிமையாக திடீரென நிச்சயதார்த்தத்தை முடித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் அது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
Recommended Video
நடிகர் விஷ்ணு விஷாலும் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.
ஜூவாலா கட்டாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாகவே விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.

பிறந்தநாள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் தங்களின் காதலை உறுதிப்படுத்தினர். விரைவில் திருமணம் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஜூவாலா கட்டா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

புதிய வாழ்க்கையை தொடங்குவோம்
இதனை முன்னிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த நடிகர் விஷ்ணு விஷால், ஜூவாலா கட்டாவுக்கு பிறந்தநாள் பரிசாக மோதிரத்தை அணிவித்து நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த விஷ்ணு விஷால் புதிய வாழ்க்கையை தொடங்குவோம் என பதிவிட்டிருந்தார்.

விஷ்ணு விஷால்
இந்நிலையில் தங்களின் திடீர் நிச்சயதார்த்தம் குறித்து விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் ஊடகம் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளனர். நடிகர் விஷ்ணு விஷால் பேசியிருப்பதாவது, ஜூவாலாவின் பிறந்தநாளுக்காக நான் ஏதாவது ஸ்பெஷலாக செய்ய விரும்பினேன்.

சரியான தருணம்
பின்னர் இந்த தருணத்தில், கேள்வியை முன்வைத்து அவளை ஏன் ஆச்சரியப்படுத்தக்கூடாது என்று நினைத்தேன். இது நேற்று முன்தினம் இரவு நாங்கள் விவாதித்த ஒன்று, இது சரியான தருணம் போல் உணர்ந்தேன். அது ஒரு தன்னிச்சையான சைகை இருந்தது மற்றும் அதிர்ஷ்டவசமாக, அவர் ஆமாம் என்றார்" இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

ஸ்பெஷல் சர்ப்ரைஸ்
ஜூவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலுடன் ஒரு புதிய பயணத்தை தொடங்க எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய ஜூவாலா கட்டா, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் தீவிரமாக இருந்தோம், நிச்சயதார்த்தம் தாமதமாகிவிட்டது. ஆனால் எனது பிறந்தநாளில் விஷ்ணு இந்த கேள்வியை எழுப்புவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது உண்மையிலேயே ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸாக இருந்தது என கூறியுள்ளார்.

பலரும் வாழ்த்து
நிச்சயதார்த்தத்தின் மூலம் திருமண வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ள இருவருக்கும் சமூக வலைதளங்களில் திரைத்துறை மற்றும் விளையாட்டுத் துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











