விவாகரத்தான கையோடு வீராங்கனையுடன் ஜாலி பண்ணும் பிரபல நடிகர்.. இதனான் காரணமா.. வைரலாகும் போட்டோஸ்!

Recommended Video

Vishnu Vishal jwala gutta got hitched up | New Year 2020

சென்னை: காதல் மனைவியை விவாகரத்து செய்த கையோடு பிரபல நடிகர் விளையாட்டு வீராங்கனையுடன் நெருக்கமாக புத்தாண்டை கொண்டாடிய போட்டோக்கஙள வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால், 2009ஆம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. அண்மையில் அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது.

திருமணம்

திருமணம்

சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால்.

விவாகரத்து

விவாகரத்து

இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இந்நிலையில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது காதல் மனைவியை கடந்த ஆண்டு முன்பு விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் விஷ்ணு விஷால். இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

காரணம்

காரணம்

குழந்தை மற்றும் மனைவி ரஜினியின் நலன் கருதியே விவாகரத்து செய்ததாக தெரிவித்தார். ஆனால் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் விளையாட்டு வீராங்கனையான ஜுவாலா கட்டாவுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தால்தான் மனைவியை விவாகரத்து செய்ததாக பேச்சு எழுந்தது.

போட்டோக்கள்

போட்டோக்கள்

ஆனால் அதுகுறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர். அதேநேரத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி வைரலானது.

நெருக்கமான போட்டோஸ்

நெருக்கமான போட்டோஸ்

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலும் ஜுவாலா கட்டாவும் இணைந்து புத்தாண்டு கொண்டாடியுள்ளனர். அப்போது இருவரும் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை ஜுவாலா கட்டா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

 கட்டிப்பிடித்து முத்தம்

கட்டிப்பிடித்து முத்தம்

அதில் இருவரும் கட்டிப்பிடித்தும் முத்தம் கொடுத்தும் மிகவும் நெருக்கமாக உள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருவரும் முகத்தோடு முகம் ஒட்டி வைத்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள ஜுவாலா கட்டா, விஷ்ணு விஷாலை மை பேபி என குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

எங்களிடம் இருந்து

மேலும் இருவரும் இணைந்துள்ள போட்டோவை பதிவிட்டுள்ள ஜுவாலா கட்டா, எங்களிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்து என்றும் கூறியுள்ளார்

அதிகாரப்பூர்வமாக

அதிகாரப்பூர்வமாக

இருவரும் தங்களின் காதல் குறித்து வாய்திறக்காமல் இருந்த நிலையில் இந்த போட்டோக்களை ஜுவாலா கட்டா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் இருவரும் காதலில் லயித்து இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வொர்க் அவுட்

வொர்க் அவுட்

இதேபோல் ஜிம்மில் விஷ்ணு விஷால் மேலாடை இன்றி வொர்க் அவுட் செய்யும் போதும் ஜுவாலா கட்டா அவருக்கு அருகில் உள்ளார். இந்த வீடியோவையும் ஜுவாலா கட்டா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

திருமணம் விவாகரத்து

திருமணம் விவாகரத்து

பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா 2005ஆம் ஆண்டு சக பேட்மிண்டன் வீரரான சேதன் ஆனந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2011ஆம் ஆண்டு சேதன் ஆனந்தை ஜுவாலா கட்டா விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X