Vishnu Vishal: நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் வைத்த அமீர்கான்.. என்ன அர்த்தம் தெரியுமா?
சென்னை: வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தனக்கு என்று ஒரு நல்ல பெயரை நிலை நிறுத்திக்கொண்டவர் தான் விஷ்ணு விஷால். இவர் நடிகராக மட்டுமில்லாமல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா தம்பதியினருக்கு அண்மையில் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர் கான் பெயர் வைத்துள்ளார்.
விஷ்ணு விஷாலுக்கு கடந்த 2010 ஆண்டு ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆர்யன் என்கிற மகன் இருந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். ரஜினியுடனான பிரிவுக்கு பின், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஏப்ரல் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. திருமண நாளிலேயே இரண்டாவது பெண் குழந்தைக்கு தந்தையானதை, திருமண நாளன்று மகளே பரிசாக கிடைத்து இருப்பதாக விஷ்ணு விஷால் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.

குழந்தையின் பெயர்: இந்நிலையில், நேற்று ஹைதராபாதில் மகளின் பெயர் சூட்டு விழாவில் தனது அன்பு மகளுக்கு மீரா என பெயர் வைத்துள்ளார். அந்த விழாவில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டார். இதுபற்றி நடிகர் விஷ்ணு விஷால், தனது எக்ஸ் தள பக்கத்தில், " எங்கள் மகள் மிராவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இந்த நிகழ்விற்காக ஹைதராபாத் வரை வந்த நடிகர் ஆமிர் கானுக்கு எனது அன்பு. அவருடன் இதுவரையிலான உறவு ஒரு மேஜிக்கலான அனுபவமாக இருந்திருக்கிறது என பதிவிட்டுள்ளார். மீரா என்பதன் பொருள் அளவு கடந்த அன்பு மற்றும் அமைதி என்பதாகும்.
அடுத்தடுத்து வெற்றிப்படம்: நடிகர் விஷ்ணு விஷால், 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து முண்டாசுபட்டியில், பால் பாண்டி, குள்ளநரி கூட்டம், நீர் பறவை, ராட்சசன், ஜீவா, இன்று நேற்று நாளை, சிலுக்குவார்பட்டி சிங்கம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கட்டா குஸ்தி, போன்ற திரைப்படங்களில் இந்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.
கிடப்பில் மோகன்தாஸ்: நடிகராக ஜொலித்துக்கொண்டிருந்த விஷ்ணு விஷால், சொந்தமாக விஷ்ணு விஷால் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை தயாரித்தார். இவர் தயாரித்த முதல் படமே நல்ல வசூலை பெற்றது. இதைத் தொடர்ந்து, சிலுக்குவார்பட்டி சிங்கம், FIR, கட்டா குஸ்தி போன்ற படங்களையும் தயாரித்தார். இந்த படங்களைத் தொடர்ந்து மோகன்தாஸ் என்ற படத்தை தயாரித்து வந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், லல்லு, கருணாகரன், பிரகாஷ் ராகவன் மற்றும் ஷாரிக் ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











