விஷ்ணு விஷாலுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தில் குவியும் வாழ்த்து !

சென்னை : கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையை தொடங்கி பின் திரைப்படங்களின் மூலம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட தனித்துவமான படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து கொண்ட இவர் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இவ்வாறு வெற்றிப் படங்களை தயாரித்தும் நடித்தும் வரும் விஷ்ணு விஷால் இன்று தனது பிறந்தநாளை வருங்கால மனைவியுடன் கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளையொட்டி திரைப் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சினிமாவில் ஜொலித்து

சினிமாவில் ஜொலித்து

சினிமா துறைக்குள் ஆசைப்பட்டு வந்தவர்களை விட இங்கு எதார்த்தமாக வந்து வெற்றி பெற்றவர்கள் தான் அதிகம். அந்த வகையில் விஷ்ணு விஷாலும் தனது வாழ்க்கையில் ஒரு கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்ற ஆசையில்தான் தொடங்கினார் ஆனால் எதிர்பாராத சில விபத்துக்கள் மூலம் அதைத் தொடர முடியாமல் தற்பொழுது சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

பல ஆண்டுகளாக

பல ஆண்டுகளாக

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை அழகானவர்களை விட நல்ல நடிக்க தெரிந்தவர்களுக்கு எப்பொழுதுமே மக்கள் ஆதரவு கொடுத்து வருவார்கள் என்பதை பல ஆண்டுகளாக நிரூபித்து வருகின்றனர். அந்தவகையில் விஷ்ணு விஷால் தனது நடிப்பின் மூலம் இன்றளவும் பல கோடி மக்களை கவர்ந்து வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

திருப்புமுனையாக அமைந்தது

திருப்புமுனையாக அமைந்தது

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் அதில் நடித்ததற்காக சிறந்த அறிமுக கதாநாயகனுக்கான விருதுகளையும் அள்ளிச் சென்றார். வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து அந்தப் படத்தில் நடித்த பலருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. அவ்வாறு இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

முண்டாசுப்பட்டி

முண்டாசுப்பட்டி

கபடியை மையமாகக் கொண்டு வெளியான வெண்ணிலா கபடிக் குழு வெற்றி பெற்றதை தொடர்ந்து பல்வேறு தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தும் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல படங்களில் இவரின் பெயரை சொல்லும் வகையில் தமிழ் திரையுலகில் வெளியாகி பல நாட்கள் ஓடி வசூலை வாரி குவித்துள்ளது.

சிக்ஸ் பேக்

சிக்ஸ் பேக்

தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வரும் விஷ்ணு விஷால் தற்போது நடித்துவரும் எஃப் ஐ ஆர் மற்றும் காடான் போன்ற படங்களில் நடிப்பதற்காக உடம்பை பயங்கரமாக தயார் செய்து சிக்ஸ் பேக் என்ற வயிற்று படிக்கட்டுகளை வைத்தவாறு வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

Recommended Video

PROMO | ACTOR PRASANNA AND DIRECTOR MYSSKIN ISSUE | COMING SOON | FILMIBEAT TAMIL
பிறந்த நாள்

பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களையும் வித்தியாசமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து மக்களைத் தொடர்ந்து ஆச்சரியப் படுத்திவரும் விஷ்ணு விஷால் ஜூலை 17ஆம் தேதியான இன்று தனது 36-வது பிறந்தநாளை தனது குடும்பத்தினர் தனது வருங்கால மனைவியுடன் கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகைகள் இவரின் புகைப்படத்தை ஸ்டேடஸ் மற்றும் டிபியாக வைத்து இவரது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X