Vishnu vishal: ரஜினி ஃபேனாகவே மாறிய விஷ்ணு விஷால்.. ரோகிணி தியேட்டரில் லால் சலாம் கொண்டாட்டம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியுடன் இணைந்து கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. 3 மற்றும் வை ராஜா வை படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக ஐஸ்வர்யா ரஜினி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்துவரும் நிலையில் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் அனைத்து தரப்பினரையும் கவரும்வகையில் அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

படம் ரஜினியின்அடுத்த பாட்ஷா என்று ரசிகர்கள் கொண்டாட்ட விமர்சனம் கொடுத்து வருகின்றனர். படத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் இவர்களுடன் செந்தில், சரண்ராஜ், கேஎஸ் ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, தங்கதுரை உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக படத்தின் ரிலீசுக்காக படக்குழுவினர் அதிகமான பிரமோஷன்களில் ஈடுபட்டிருந்தனர். படம் அதிகளவிலான மக்களை ரீச் செய்ய இதுவும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. படத்தின் இசை வெளியீட்டின்போது ரஜினிகாந்தின் பேச்சு மிகுந்த கவனத்தை பெற்றிருந்தது.

Actor Vishnu vishal enjoyed Rajinis Lal salaam movie in Rohini theatre with fans

லால் சலாம் படம்: நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த நிலையில் தற்போது அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் அவர் நடித்துள்ள லால் சலாம் படம் ,இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப்படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், நிரோஷா, தங்கதுரை உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். திருவிழா கொண்டாட்டம் மற்றும் கிரிக்கெட் போட்டி இவற்றை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான பிரமோஷன்கள்: முன்னதாக படத்திற்காக அதிகளவில் பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டிருந்தனர். லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, புதுச்சேரி, மும்பை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில், படத்தின் ரிலீஸ் கடந்த பொங்கல் பண்டிகையையொட்டியே திட்டமிடப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் இன்றைய தினம் படம சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. முன்னதாக தன்னுடைய படங்களில் திரைக்கதை மூலம் பாராட்டு பெற்றிருந்த ஐஸ்வர்யா ரஜினி, தற்போது மீண்டும் அந்த மேஜிக்கை செய்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால்: படத்தில் லீட் கேரக்டர்களில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ளனர். தன்னுடைய படங்களின் ரிலீசின்போது தான் எப்போதுமே முந்தைய நாட்களில் பதற்றமாக உணர்வேன் என்றும் ஆனால் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ளதால் தனக்கு அந்த பதற்றம் இல்லை என்றும் ரசிகர்களுடன் இணைந்து ரஜினி ரசிகனாக தானும் திரையரங்கில் சென்று திரைப்படம் பார்க்க விரும்புவதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷ்ணு விஷால் கூறியிருந்தார். அதற்கேற்ப இன்றைய தினம் முதல்நாள் முதல் ஷோவில் ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து அவர் லால் சலாம் படத்தை பார்த்துள்ளார்.

ரசிகர்களுடன் படம் பார்த்த விஷ்ணு விஷால்: ரசிகர்களுடன் இணைந்து உற்சாகமாக அவர் படத்தை ரோகிணி திரையரங்கில் பார்த்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினி என்று டைட்டிலில் போட்டவுடன் மற்ற ரசிகர்களை போலவே அவரும் கைத்தட்டி ஆரவாரத்துடன் கூச்சல் போட்டு அதை என்ஜாய் செய்தார். படத்தில் முதல் பாதியில் 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ரஜினிகாந்த் நடித்துள்ளார். இரண்டாவது பாதியில் அவரது ஆக்கிரமிப்பை அதிகமாக பார்க்க முடிகிறது. படத்தில் விஷ்ணு விஷாலுக்கும் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை அவர் சரியாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அதிகமாக ஸ்கோர் செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X