Lal Salaam: சூப்பர்ஸ்டார் படத்துல நான் ஹீரோவா நடிச்சது பெரிய விஷயம்.. விஷ்ணு விஷால் சிலிர்ப்பு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் லால் சலாம். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக 3 மற்றும் வை ராஜா படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா இயக்கத்தில் 3வது படமாக லால் சலாம் உருவாகியுள்ளது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். முன்னதாக படத்தின் போஸ்டர்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன.
படம் கடந்த பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு இன்றைய தினம் சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் எஸ் ரவிக்குமார், நெல்சன், லோகேஷ் கனகராஜூம் இணைந்துள்ளனர். மேலும் பிரபலங்கள் சினேகன், கன்னிகா உள்ளிட்டவர்களும் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

லால் சலாம் படம்: இயக்குநரும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். ரஜினிகாந்த் இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களத்தை அமைத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. மும்பை, சென்னை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை போனற் இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் படம் கடந்த பொங்கலுக்கே ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி ரிலீஸ்: ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தற்போது பிப்ரவரிக்கு தள்ளிப் போயுள்ளது. இதையடுத்து படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். படத்தின் இசை வெளியீடு இன்றைய தினம் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் கேஎஸ் ரவிக்குமார், லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட இயக்குநர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டுள்ளனர். லதா ரஜினிகாந்த், சினேகன், கன்னிகா உள்ளிட்டவர்களும் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
லால் சலாம் இசை வெளியீடு: நடிகர் ரஜினிகாந்தும் எளிமையாகவும் அதே சமயத்தில் கெத்தாகவும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்தப் படத்தின் அவரது கேரக்டர் மொய்தீன் பாய் பயன்படுத்திய கருப்புநிற காரிலேயே அவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், லால் சலாம் படம் குறித்து மிகுந்த உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். படம் அழுத்தமான அரசியல் சப்ஜெக்டில் உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். படத்தில் ரஜினிகாந்த், ஏஆர் ரஹ்மான், விக்ராந்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்தது குறித்தும் அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால் மகிழ்ச்சி: சூப்பர்ஸ்டார் படத்தில் லீட் கேரக்டரில் நடித்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய கேரியரில் இந்தப் படம் மிகவும் முக்கியமான படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் இந்த கேமியோ கேரக்டரில் நடிக்க ரஜினிகாந்த் முடிவெடுத்ததன் காரணத்தை படம் வெளியானவுடன் ரசிகர்கள் அறிந்துக் கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி இதுபோன்ற அழுத்தமான கதைக்களத்தில் பணியாற்றியுள்ளது குறித்தும் விஷ்ணு விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











