Hot spot 2 movie: என்கூட தான் ஃபர்ஸ்ட் நைட்.. ஹாட் ஸ்பாட் 2 படத்தை தயாரிக்கும் விஷ்ணு விஷால் அலப்பறை
சென்னை: அடியே, திட்டம் இரண்டு படங்கள் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆந்தாலஜி திரைக்கதை பாணியில் வெவ்வேறு வித்தியாசமான கதைகளை உள்ளடக்கிய படமாக உருவாகி வெளியானது ஹாட் ஸ்பாட். கலையரசன், கௌரி கிஷன், ஜனனி ஐயர் உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்திருந்தனர்.
படத்தின் தலைப்பிற்கு ஏற்ப சர்ச்சைக்குரிய வகையிலான 4 கதைகளை அடுத்தடுத்து கொடுத்திருந்தார் விக்னேஷ் கார்த்திக். இந்தப் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இதன் இரண்டாவது பாகம் குறித்து தற்போது பிரமோ வெளியாகியுள்ளது. இதை நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கவுள்ளதாக பிரமோவில் காட்டப்பட்டுள்ளது.

ஹாட் ஸ்பாட் படம்: நடிகர்கள் கலையரசன், கௌரி கிஷன், ஜனனி ஐயர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது ஹாட் ஸ்பாட். முன்னதாக அடியே, திட்டம் இரண்டு படங்களை கொடுத்து கோலிவுட்டில் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இந்தப் படத்தை ஆந்தாலஜி பாணியில் கொடுத்திருந்தார். அடுத்தடுத்து நான்கு கதைக்களங்களை ஒன்றன்பின் ஒன்றாக இயக்குநர் கொடுத்திருந்தார். திருமண முறையில் உள்ள உறவுச்சிக்கல், அதை எதிர்கொள்ளும் இன்றைய தலைமுறை என்பது போன்ற கதைக்களங்களை இந்த படத்தில் பார்க்க முடிந்தது.
ஆந்தாலஜி பாணி படம்: இரண்டாவது கதையில் லெஸ்பியன் உறவையும் மையமாக வைத்து கதைக்களம் பின்னப்பட்டிருந்தது. இந்தப்படத்தில் கலையரசன் ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ள நிலையில், அவர் பேச முயலும் விஷயங்கள் பார்வையாளர்களை அதிர செய்தத. இந்தப்படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் கனத்த இதயத்துடன் வெளியேறியதை பார்க்க முடிந்தது. முன்னதாக இந்தப் படம் ரசிகர்களை சென்று சேராத நிலையில், படம பிடிக்கவில்லை என்றால் செருப்பால் அடியுங்கள் என்று முன்னதாக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கனத்த இதயத்துடன் பேட்டி கொடுத்ததை பார்க்க முடிந்தது. இதன்மூலம் இந்த ஆந்தாலஜி மிகப்பெரிய கவனத்தையும் தொடர்ந்து வரவேற்பையும் பெற்றது.
ஹாட் ஸ்பாட் 2 அறிவிப்பு: இந்நிலையில் இந்தப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கவுள்ளார். இதில் ஃபர்ஸ்ட் நைட் அறைக்குள் செல்லும் இயக்குநருக்கு அவரது மாமனார் பரிசு ஒன்றை அறையில் வைத்துள்ளதாக கூறுகிறார். உள்ளே மாஸாவோடு மாஸாக காணப்படும் விஷ்ணு விஷால் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கிற்கு பரிசு கொடுக்க, அதை திறந்து பார்க்கும் அவர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். அதில் செருப்பு காணப்படுகிறது. இதைப்பார்த்து புது மாப்பிள்ளை திகைக்க, இரண்டாவது பார்ட்டையும் சிறப்பாக செய்ய வேண்டும், மக்கள் செருப்பால் அடித்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார் விஷ்ணு விஷால்.
விஷ்ணு விஷால் அலப்பறை: இதையடுத்து புது மாப்பிள்ளையிடம் அவருக்கு ஃபர்ஸ்ட் நைட் தன்னுடன் தான் என்றும் பொண்டாட்டியுடன் இல்லை என்றும், ஹாட் ஸ்பாட் 2 படத்தின் கதைகளை சொல்லும்படியும் விஷ்ணு விஷால் கூறுகிறார். இதனால் திகைத்தாலும் விக்னேஷ் கார்த்திக் அதற்கு தயாராகிறார். இதனிடையே, ஆரம்பிக்கலாமா என்று கூறி விஷ்ணு விஷால் ஸ்டோரி டிஸ்கஷனுக்கு தயாராவதாக இந்த பிரமோ நிறைவடைந்துள்ளது. கொஞ்சம் டூ மச்சாக போவோமா என்று இந்த பிரமோ வார்த்தை ஜாலம் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











