Lal salaam movie: ப்பா என வியந்த தருணம்.. லால் சலாம் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷ்ணு விஷால் பேச்சு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லால் சலாம் படம் வரும் 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படம் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது படம். முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
படத்தில் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா, இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி உள்ளிட்டவர்கள் இணைந்திருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய அவர்கள் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர். விஷ்ணு விஷால் தன்னுடைய 15 வயது கேரியரில் இந்தப் படம் பெஸ்ட்டாக அமைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

லால் சலாம் படம்: நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். 3, வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள அவர் மூன்றாவது முறையாக லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். வரும் 9ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு நடந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். நடிகர் விஜய் தான் பார்த்து வளர்ந்தவர் என்றும் அவர் கூறியிருந்தார். முன்னதாக ஜெயிலர் பட இசை வெளியீட்டில் அவர் பேசிய காக்கா மற்றும் கழுகு கதை சமூக வலைதளங்களில் வேறு மாதிரியாக பகிரப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ்: படம் இன்னும் 4 நாட்களில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு தற்போது சென்னையில் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி உள்ளிட்டவர்கள் பங்கேற்று நிகழ்ச்சி குறித்து பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர். விஷ்ணு விஷால் பேசுகையில் தன்னுடைய கேரியரில் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக தான் மகிழ்ச்சியாக தூங்குவேன் என்று அவர் கூறியுள்ளார். தன்னுடைய மற்ற படங்களின் ரிலீசின்போது தான் மிகவும் டென்ஷனாக இருந்ததாகவும் ஆனால் இந்தப் படத்தில் சூப்பர்ஸ்டார் நடித்துள்ளதால் படத்தின் வெற்றி குறித்த டென்ஷன் தனக்கில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரெயிலர் வெளியீடு: தன்னுடைய 15 ஆண்டுகால சினிமா கேரியரில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய கிப்ட் லால் சலாம் படம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் முதல் கட்ட சூட்டிங் மும்பையில் நடந்தபோது ரஜினி நடந்துவரும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அப்போது தானும் விக்ராந்த் உள்ளிட்டவர்களும் அதை பார்த்து ப்பா என்னடா இப்படி இருக்காரு என்று வியப்படைந்ததாகவும் அவர் சிலிர்ப்புடன் பேசினார். மேலும் விஷ்ணு என்றாலே சிறப்பான கதை என்று ரஜினி தன்னை பாராட்டியது குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்தப் படம் உலகளவில் அதிகமான ரசிகர்களை சென்றடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
படத்தின் கதைதான் ஹீரோ: இந்தப் படத்தின் ஹீரோவாக படத்தின் கதை அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப்படத்தின் கதை தன்னை அதிகமாக இம்ப்ரஸ் செய்ததாகவும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் நடித்தது சிறப்பாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தில் பேசப்பட்ட அரசியல் அனைத்து தரப்பினரையும் கண்டிப்பாக கவரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் கதை அதிகமாக கவர்ந்ததால்தான் ரஜினியும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ரஜினியின் டெடிகேஷன் படத்தின் வெற்றியை உறுதி செய்யும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











