Don't Miss!
- News
பேனா சின்னத்திற்கு எதிரான வழக்கு.. 2 துறைதான் பதில் கொடுத்திருக்கு.. ஒத்திவைத்த பசுமை தீர்ப்பாயம்!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெண்ணிலா கபடிகுழு ஹரி வைரவனின் கடைசி வாய்ஸ் மெசேஜ்..கலங்கிய விஷ்ணு விஷால்!
சென்னை : உயிரிழந்த ஹரி வைரவன் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் கேட்டு நடிகர் விஷ்ணு விஷால் கண்கலங்கி உள்ளார்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு படத்தில், விஷ்ணு விஷாலின் நண்பராக நடித்தவர் ஹரி வைரவன்.
இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கையே
மாறும்னு
நினைச்சோம்..ஆனா..வெண்ணிலா
கபடிகுழு
ஹரி
வைரவனை
நினைத்து
கலங்கும்
அப்புக்குட்டி!

நடிகர் ஹரி வைரவன்
படவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியா அலைந்து திரிந்த வைரவனுக்கு வெண்ணிலா கபடிகுழு படம் நடிகர் என்ற அங்கிகாரத்தை கொடுத்தது. இதையடுத்து ஓரிரு படங்களில் நடித்து வந்த ஹரி வைரவனுக்கு திடீரென உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமாவில் இருந்து மீண்டார்.

இரண்டு கிட்டினியும் செயலிழந்தது
கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டு கிட்னியும் செயலிழந்து முகம், கை, கால் வீங்கிய நிலையில் நடக்கவே முடியாமல் அவதிப்பட்டு வந்தார். ஆறு மாதங்களுக்கு முன் ஹரி வைரவனின் மோசமான நிலை குறித்து, அவரது மனைவி கண்கலங்கி பேட்டியில் கூறியிருந்தார். இவர் இன்னும் 6 மாதம் தான் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால், அவர் உயிரைக் காப்பாற்ற உதவி செய்யுமாறு கேட்டிருந்தார்.

உயிரிழந்தார்
இதையடுத்து, பலரும் அவருக்கு உதவ முன் வந்தனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் டிசம்பர் 3ந் தேதி அதிகாலை 12:15 மணியளவில் உயிரிழந்தார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வெண்ணிலா கபடி குழு இயக்குநர் சுசீந்திரன், விஷ்ணு விஷால் , அப்புக்குட்டி என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

என்னால் முடிந்த உதவியை செய்தேன்
இந்நிலையில், விஷ்ணு விஷால் அளித்துள்ள பேட்டியில், வைரவன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர், கடந்த ஆறு மாதங்களாக நான் அவரின் குடும்பத்துடன் பேசிக்கொண்டுதான் இருந்தேன் இது வெளியில் யாருக்கும் தெரியாது. என்னால் முடிந்த உதவியை அவர்களது குடும்பத்திற்கு செய்து இருக்கிறேன்.

கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்
அவரது மனைவியிடம் கூட என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள் குழந்தையின் படிப்பு செலவை கூட பார்த்துக் கொள்கிறேன் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். வைரவன் கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் கூட என்னிடம் இருக்கிறது. நன்றி மாப்பிள்ளை எனக்கு நீ உதவி செய்கிற ரொம்ப சந்தோஷம் என்று சொன்னார் நானும் அவரிடம் கவலைப்படாத வைரவா எல்லாம் சரியாகிவிடும் என்றேன் அதற்குள் இப்படியாகி விட்டது என கண்கலங்கி பேசினார்.