Actor Vishnu Vishal: இறுதியாக கிரிக்கெட் கடவுளை பார்த்து.. மெய்சிலிர்த்த விஷ்ணு விஷால்!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழில் நடித்து வருகிறார். ராட்சசன் போன்ற படங்கள் அவரது கேரியரில் சிறப்பாக அமைந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கட்டா குஸ்தி படத்திலும் விஷ்ணு விஷாலின் நடிப்பு பரவலாக பாராட்டுக்களை பெற்றது. தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ளார். அடுத்த மாதம் 9ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக பொங்கலையொட்டி படம் வெளியாகவிருந்தது.

லால் சலாம் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால், அடுத்ததாக தன்னுடைய சொந்த பேனரில் இயக்குநர் கோகுலுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப்படம் மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ளதாக விஷ்ணு விஷால் முன்னதாக அறிவித்துள்ளார். விரைவில் படத்தின் சூட்டிங் அப்டேட் வெளியாகும் என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார். கோகுல் இயக்கத்தில் இம்மாத இறுதியில் சிங்கப்பூர் சலூன் படம் ரிலீசாகவுள்ளது. இதில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Actor Vishnu Vishal met Sachin Tendulkar and said his dream come true

நடிகர் விஷ்ணு விஷால்: நடிகர் விஷ்ணு விஷால் சினிமாவில் முன்னணி ஸ்டாராக இருந்த போதிலும் தனது கல்வியை முடித்தபின்பு அவர் கிரிக்கெட் வீரராகவே விரும்பினார். முக்கியமான போட்டிகளில் விளையாடிவந்த விஷ்ணு விஷாலுக்கு காலில் ஏற்பட்ட காயம் அவரது வாழ்க்கையை மாற்றியது. தன்னுடைய மாமா மூலம் திரையுலகில் நுழைந்த விஷ்ணு விஷால் தற்போது முன்னணி நடிகராக மாறியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டில் வெளியான வெண்ணிலா கபடி குழு படம் அவருக்கு தமிழில் சிறப்பான என்ட்ரியை கொடுத்தது. இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருதை வென்றார் விஷ்ணு விஷால்.

அடுத்தடுத்த வெற்றிப் படங்கள்: தொடர்ந்து முண்டாசுப்பட்டி உள்ளிட்ட சில படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்திய விஷ்ணு விஷாலுக்கு ஜீவா படம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. இந்தப் படத்தில் இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்து நடித்திருந்தார் விஷ்ணு விஷால். தொடாந்து ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்கள் விஷ்ணு விஷால் கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றன. ராட்சசன் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்துவரும் விஷ்ணு விஷால் தற்போது ரஜினிகாந்துடன் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

லால் சலாம் படம்: ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் 9ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனது மனதிற்கு பிடித்தமான கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட ஜீவா படத்தில் நடித்திருந்த விஷ்ணு விஷால், இந்தப்படத்திலும் அந்தக் கதைக்களத்திலேயே நடித்துள்ளார். முன்னதாக ஜீவா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், லால் சலாம் படமும் வெற்றிப்பட பட்டியலில் இணையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாக சமூகவலைதளம் மூலம் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

சச்சினை சந்தித்த விஷ்ணு விஷால்: இறுதியாக இறுதியாக மற்றும் இறுதியாக தான் கிரிக்கெட் கடவுளை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்தமான கிரிக்கெட்டராக எப்போதும் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை தான் சந்தித்து பேசியதாகவும் இதன்மூலம் தன்னுடைய கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரே ஒரு கிரிக்கெட் கடவுளை சந்தித்து பேசியது தன்னுடைய மனதை மிகவும் மயக்குவதாக அமைந்ததாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X