ரொம்ப மிஸ் பண்றேன்.. காதலியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை போட்டு ஃபீலாகும் விவாகரத்து நடிகர்!
சென்னை: காதலியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து நடிகர் விஷ்ணு விஷால் புலம்பி தீர்த்திருக்கிறார்.
Recommended Video
நடிகர் விஷ்ணு விஷால் தனக்கான கதைகளை சிறப்பாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் இதுவரை நடித்துள்ள படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படம் பெரும் ஹிட்டடித்தது. ஏராளமான விருதுகளையும் குவித்தது. தொடர்ந்து, காடன், ஆரன்யா, ஜகஜால கில்லாடி, எஃப்ஐஆர், உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

விவாகரத்து
ஏற்கனவே தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்தார் விஷ்ணு விஷால். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். விவாகரத்துக்கான காரணங்கள் வெளியாகவில்லை.

இரவு பார்ட்டிகள்
இந்நிலையில் விஷ்ணு விஷாலும் விளையாட்டு வீராங்கனையான ஜூவாலா கட்டாவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது. இருவரும் இரவு பார்ட்டிகளில் ஒன்றாக பங்கேற்ற போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புதான் காரணம்
இதனால் விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்ததற்கான காரணம், ஜூவாலா கட்டாவுடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்புதான் என கூறப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக இருவரும் எதுவும் பேசாமல் இருந்தனர். மேலும் தங்களின் காதலை உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

மாறி மாறி ஃபீலிங்ஸ்
இந்நிலையில் இருவரும் தங்களின் காதலை அண்மையில் ஒப்புக்கொண்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தற்போது லாக்டவுன் என்பதால் ஒருவரை ஒருவர் பார்த்து பேச முடியாமல் மிஸ் செய்து வருவதாக தாங்கள் ஒன்றாக இருந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ஃபீலிங்ஸ் காட்டி வருகின்றனர்.

இன்ஸ்டாவில் வேதனை
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூவாலா கட்டா விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாக இருந்த போட்டோவை ஷேர் செய்து மிஸ் பண்ணுவதாக கூறினார். இந்நிலையில் விஷ்ணு விஷால் இன்ஸ்டாகிராமில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மிஸ் பண்றேன்
இருவரும் பாலி ஏர்போர்ட்டில் இருவரும் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள விஷ்ணு விஷால், ஜூவாலா கட்டாவுடன் இருந்த அந்த நேரத்தை மிஸ் பண்ணுவதாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இன்னும் கொஞ்சநாள்தான் விடுங்க தலைவா என ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











