தெலுங்கு மருமகன் ஆகப்போறேன்.. ஜூவாலா கட்டாவுடன் விரைவில் திருமணம்.. அறிவித்த விஷ்ணு விஷால்!

சென்னை: தனக்கும் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தனக்கான கதைகளை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

விஷ்ணு விஷாலின் எதார்த்தமான நடிப்புக்கு என்றே ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார் விஷ்ணு விஷால்.

மனைவி விவாகரத்து

மனைவி விவாகரத்து

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

பார்ட்டிகளில் நெருக்கம்

பார்ட்டிகளில் நெருக்கம்

இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கணையான ஜூவாலா கட்டாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் இரவு பார்ட்டிகளில் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது.

வைரலான போட்டோக்கள்

வைரலான போட்டோக்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளில் இருவரும் மோதிரம் மாற்றி தங்களின் நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

மாலத்தீவில் ஜாலி

மாலத்தீவில் ஜாலி

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ்ணு விஷால், ஜூவாலா கட்டாவுடன் மாலத்தீவுக்கு சென்று ஓய்வை கழித்தார். அந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

பிரி ரிலீஸ் நிகழ்ச்சி

பிரி ரிலீஸ் நிகழ்ச்சி

இந்நிலையில் ஜூவாலா கட்டாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். அதாவது பிரபு சாலமனின் காடன் படத்தின் தெலுங்கு வர்ஷனான ஆரண்யா படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி ஹைத்ராபாத்தில் நடைபெற்றது.

பெரிய உதவி செய்திருக்கிறார்

பெரிய உதவி செய்திருக்கிறார்

இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் இணைந்து பங்கேற்றனர். அப்போது பேசிய விஷ்ணு விஷால் ஜூவாலாவுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். இந்தப் படத்திற்காக ஜூவாலா கட்டா எனக்கு பெரிய உதவி செய்திருக்கிறார்.

தெலுங்கு மருமகன்

தெலுங்கு மருமகன்

இந்தப் படத்தின் மொத்த ஷூட்டிங்கிலும் அவர் என்னுடன் இருந்தார். தொடர்ந்து திருமணம் குறித்து பேசிய விஷ்ணு விஷால் விரைவில் ஜூவாலா கட்டாவை திருமணம் செய்துக் கொண்டு தெலுங்கு மருமகன் ஆகப்போகிறேன், இதனால் ரொம்பவே மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

விஷ்ணு விஷால் மனு ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தின் ரிலீஸுக்காகவும் காத்திருக்கிறார். இந்தப் படத்தில் ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அஷ்வந்த் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் மனு ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தின் ரிலீஸுக்காகவும் காத்திருக்கிறார். இந்தப் படத்தில் ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அஷ்வந்த் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X