பிரமாண்டமா கொண்டாடல.. ஸ்பெஷல் சபதமும் இல்ல.. காதலியை கரம்பிடித்த கையோடு மனம் திறந்த விஷ்ணு விஷால்!

சென்னை: கொரோனாவால் திருமணத்தை கிராண்டாக கொண்டாடவில்லை என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.

ஏற்கனவே தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இரண்டாவது காதலி

இரண்டாவது காதலி

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்ததற்கு காரணம் அவருக்கும் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுக்கும் இடையிலான காதலே என்று கூறப்பட்டது.

திடீர் நிச்சயதார்த்தம்

திடீர் நிச்சயதார்த்தம்

இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியானது. இதனை தொடர்ந்து ஜூவாலாவுடனான காதலை ஒப்புக் கொண்டார். ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளில் நள்ளிரவில் அவருக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார் விஷ்ணு விஷால்.

நேற்று திருமணம்

நேற்று திருமணம்

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தங்களின் திருமண அழைப்பிதழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதன்படி நேற்று இருவரும் ஹைத்ரபாத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

அவர்களின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. திருமண போட்டோக்களை பார்த்த பலரும் விஷ்ணு விஷாலுக்கும் ஜூவாலா கட்டாவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பதிவு திருமணம் செய்தோம்

பதிவு திருமணம் செய்தோம்

இந்நிலையில் திருமணம் முடித்த கையோடு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள விஷ்ணு விஷால், நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம். ஆனால் நாங்கள் ஹால்டி மற்றும் மெஹெண்டி போன்ற பாரம்பரிய விழாக்களை இரண்டு நாட்களாக திருமண நாளிலும் அதற்கு முந்தைய நாளிலும் வைத்திருந்தோம்.

பிரமாண்டமாக கொண்டாடவில்லை

பிரமாண்டமாக கொண்டாடவில்லை

எங்களுக்கு நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கோவிட் 19 காரணமாக நாங்கள் பிரமாண்டமாக கொண்டாடவில்லை. நாம் பொறுப்பாக இருக்க வேண்டும், தற்போது நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை புறக்கணிக்க முடியாது.

ஹோட்டல்களை தேர்வு செய்யவில்லை

ஹோட்டல்களை தேர்வு செய்யவில்லை

திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளும் திருமணமும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் இடத்தில் நடைபெற்றது. "நாங்கள் வணிக ஹோட்டல்களையோ திருமண மண்டபங்களையோ தேர்வு செய்யவில்லை" என்றும் விஷ்ணு விஷால் தெரவித்துள்ளார்.

Recommended Video

MaKaPa Anand & Suzanna 15th Wedding Anniversary Party FULL VIDEO | Pugazh, Sam Vishal
ஸ்பெஷல் உறுதிமொழிகள் இல்லை

ஸ்பெஷல் உறுதிமொழிகள் இல்லை

ஸ்பெஷல் திருமண உறுதிமொழிகள் ஏதாவது எடுத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு விஷால் "இல்லை, சிறப்பு வாக்குறுதிகள் எதுவும் எடுக்கவில்லை, ஆனால் நாங்கள் ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம்," இவ்வாறு நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X