விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப்ஐஆர் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!
சென்னை : வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழில் சிறந்த நடிகராக உள்ளவர் நடிகர் விஷ்ணு விஷால்
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல தரமான படங்களை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார்
அந்த வகையில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் எஃப்ஐஆர் படத்தையும் விஷ்ணு விஷால் தயாரித்து ஹீரோவாக நடித்து இருக்க இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்ஐஆர்
நடிகர் விஷ்ணு விஷாலின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதை களத்தில் இருக்கும் அந்த வகையில் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படம் இந்திய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட மிகச்சிறந்த திரில்லர் படமாக இன்றளவும் உள்ளது. தன்னுடைய ஒவ்வொரு கதைகளையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால் இப்பொழுது நடித்துள்ள திரைப்படம் எஃப்ஐஆர்

பைசல் இப்ராகிம் ராய்ஸ்
இயக்குனர் மனு ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். ரைசா வில்சன், மஞ்சிமா மோகன்,ரெபா மோனிகா ஜான் என மூன்று ஹீரோயின்கள் இதில் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான த்ரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் தலைப்பு எஃப்ஐஆர் என வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தின் பெயர் இப்படத்தில் பைசல் இப்ராகிம் ராய்ஸ் என்பதின் சுருக்கமே எஃப்ஐஆர் என தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தானே தயாரித்து உள்ளார்
ராட்சசன் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட 9 கதைகளில் நடிக்க இருந்து அவை அனைத்தும் கடைசி நேரத்தில் பல்வேறு காரணங்களால் கை நழுவிப் போக இறுதியாக எஃப்ஐஆர் படத்தில் ஒப்பந்தமான விஷ்ணு விஷாலுக்கு இந்த படமும் கை நழுவிப் போக இருந்தது ஆனால் இந்த கதை விஷ்ணு விஷாலுக்கு மிகவும் பிடித்துப்போக தானே தயாரித்து ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதில் விஷ்ணு விஷால் ஒரு முஸ்லிமாக நடித்துள்ளார்.
Recommended Video

டிரைலர் ரிலீஸ் தேதி
இப்படத்திற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வந்த் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோ இப்படத்தை தயாரித்து இருக்க உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. சென்ற ஆண்டே ரிலீசுக்கு தயாராக இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக
பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க எஃப்ஐஆர் படக்குழு இப்பொழுது டிரைலர் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 3ஆம் தேதி எஃப்ஐஆர் டிரைலர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











