இரண்டாம் மனைவியுடன் விஷ்ணுவிஷால் சங்கீத் நைட்…வைரலாகும் க்யூட்டான புகைப்படம்!

ஹைதராபாத் : விஷ்ணு விஷால் இப்பொழுது தனது இரண்டாம் மனைவியுடன் ஹைதராபாத்தில் சங்கீத் நைட் நிகழ்ச்சியை கொண்டாடிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

காடான், எப்ஐஆர் உள்ளிட்ட தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து, அதை சொந்த தயாரிப்பிலேயே தயாரித்து வரும் விஷ்ணு விஷால் அதற்காக உடம்பை தாறுமாறாக மெருகேற்றியுள்ளார்.

இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், தனது இரண்டாவது மனைவியுடன் சங்கீத் நைட் கொண்டாடியவாறு வெளியிட்டுள்ள க்யூட் பிக் இப்பொழுது அனைவராலும் கவரப்பட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

அடுத்தடுத்து ஆக்சன் பேக்

அடுத்தடுத்து ஆக்சன் பேக்

ராட்சசன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் நடிகர் விஷ்ணு விஷால், அடுத்தடுத்து ஆக்சன் பேக் திரைப்படங்களில் நடித்து வர விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையப் போகிறது.

ராணா நடித்துள்ளார்

ராணா நடித்துள்ளார்

மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் காடான் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வர இந்த திரைப்படத்தை கும்கி திரைப்படப் புகழ் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கி வருகிறார், மேலும் இதில் தெலுங்கு நடிகர் ராணா நடித்துள்ளார்.

காதலித்து மோதிரம் மாற்றி

காதலித்து மோதிரம் மாற்றி

இந்த நிலையில் மனக்கசப்பு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்த விஷ்ணு விஷால் இப்பொழுது பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜாவ்லா குட்டா என்பவரை சில மாதங்களுக்கு முன்பு காதலித்து மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார்.

ஹைதராபாத்தில் சங்கீத் நைட்

ஹைதராபாத்தில் சங்கீத் நைட்

இந்தியாவிற்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி தங்கம், வெள்ளி என பல பதக்கங்களை வென்று குவித்த ஜாவ்லா குட்டா உலக அளவில் மிகப் பிரபலமாக உள்ள நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் ஏற்பட்ட காதல் பின் திருமணத்தில் முடிய, இந்த ஜோடி இப்பொழுது ஹைதராபாத்தில் சங்கீத் நைட்டை மிக விமர்சையாக கொண்டாடி சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

செம க்யூட்டான

செம க்யூட்டான

அதில் ஜாவ்லா குட்டா விஷ்ணு விஷாலை அன்புடன் கட்டி அணைத்தவாறு எடுத்துக்கொண்ட செம க்யூட்டான புகைப்படத்தை விஷ்ணு விஷால் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதை அடுத்து அனைவராலும் கவரப்பட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X