யானை மீது ஒரே பாய்ச்சலில் ஏறி அமர்ந்த விஷ்ணு விஷால்.. தீயாய் பரவும் காடன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

சென்னை: காடன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.

தனக்கான கதைகளை கச்சிதமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் விஷ்ணு விஷால்.

தெலுங்கு வர்ஷன்

பிரபல நடிகரான விஷ்ணு விஷால், தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ஆரண்யா காடன் படத்தின் தெலுங்கு வர்ஷனாக உருவாகி உள்ளது.

முக்கிய கேரக்டரில் ராணா

முக்கிய கேரக்டரில் ராணா

தமிழில் உருவாகியுள்ள காடன் படம் நாளை மறுநாள் அதாவது வரும் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் படத்தில் ராணா டக்குபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

யானை மீது அமர்ந்து

யானை மீது அமர்ந்து

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காடன் படத்தின் காட்சி ஒன்றை நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார. இதில் பிரமாண்டமாய் நிற்கும் யானையின் மீது செம அசத்தலாய் ஏறி அமர்ந்து ஆட்டம் போடுகிறார் விஷ்ணு விஷால்.

இன்னும் 2 நாட்களில்

இன்னும் 2 நாட்களில்

பார்க்கவே படுஜோராக உள்ளது இந்த காட்சி. மேலும் நானும் உன்னியும் எப்போது ஒருவரை ஒருவர் முழுமையாக நம்ப தொடங்கினோமோ அப்போது இப்படி ஜம்ப் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் 2 நாட்களில் திரையரங்குகளில் பார்க்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X