அப்படி காதலிச்சேன்.. ஆனா சந்தேகம்.. அதான் விவாகரத்துல முடிஞ்சுடுச்சு.. மனம் திறந்த பிரபல நடிகர்!

Recommended Video

Vishnu Vishal | Jwala Gutta | இதுதானா விஷ்ணு விஷால் மனைவியை பிரிந்தர்க்கான காரணம்- வீடியோ

சென்னை: தனது காதல் மனைவியை விவாகரத்து செய்ததன் காரணம் என்ன என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் மனம் திறந்து பேசியுள்ளார்.

கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால், 2009ஆம் ஆண்டு ரிலீஸான இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. அண்மையில் அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது.

விவாகரத்து

விவாகரத்து

சிறப்பான கதைளை தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷாலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால்.

காதல் மனைவி

காதல் மனைவி

கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விஷாலுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் விஷ்ணு விஷால்.

உயிருக்குயிரான காதல்

உயிருக்குயிரான காதல்

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாகவும், காதல் ஒன்றே என் வாழ்க்கையில் உண்மையானதாக இருந்ததாகவும் கூறினார்.

நடிகைகளுடன் சகஜம்

நடிகைகளுடன் சகஜம்

மேலும் சில நாட்களுக்கு முன்பு வரை நான் இவ்வளவு பேசும் ஆள் கிடையாது. மிகவும் அமைதியான ஆளாகதான் இருந்தேன். ஆனால் அந்த அமைதியால் நடிப்பில் என்னால் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சக நடிகர்கள் நடிகைகளுடன் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சந்தேகமா மாறி..

சந்தேகமா மாறி..

திரைப்படங்களில் காதல் காட்சிகள் போன்றவற்றில் இயல்பாக நடிப்பதற்காக நடிகைகளிடம் சகஜமாக பேசி பழகினேன். ஆனால் இதுவே சந்தேகமாக மாறி என் திருமண வாழ்வில் விவாகரத்து வரை செல்லும் என்று நினைக்கவில்லை.

ஆரியன் என்ற ஆண்குழந்தை

ஆரியன் என்ற ஆண்குழந்தை

மேலும் என்னுடைய மகன் மற்றும் மனைவியின் நலனுக்காக மட்டுமே விவாகரத்து பெற்றிருக்கிறேன் என்று கூறினார். விஷ்ணு விஷால் - ரஜினி தம்பதிக்கு ஆரியன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

வீராங்கனையுடன் நெருக்கம்

வீராங்கனையுடன் நெருக்கம்

விவாகரத்துக்கு பிறகு விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாகவும் அவரை காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. அண்மையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X