இந்தியன் 2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய விவேக் தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: நடிகர் விவேக் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விவேக் கடந்த வெள்ளிக் கிழமை திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுய நினைவின்றி மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ, எக்மோஎன தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இறுதி அஞ்சலியில் ஏராளமானோர்

இறுதி அஞ்சலியில் ஏராளமானோர்

ஆனால் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் கடந்த சனிக்கிழமை காலை மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி அஞ்சலியிலும் இறுதிச் சடங்கிலும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

அனுபவங்களை பகிரும் பிரபலங்கள்

அனுபவங்களை பகிரும் பிரபலங்கள்

தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்களும் விவேக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவருடன் பயணித்த நாட்களையும் அவருடனான அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

விவேக் பிறந்தநாள்

இந்நிலையில் நடிகர் விவேக் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதில் இயக்குநர் ஷங்கர், நடிகர் பாபி சிம்ஹா மற்றும் படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காத விவேக் முதல் முறையாக கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Recommended Video

Bigil Amirtha Aiyer Emotional Video | எப்பவுமே Positiveஆ தான் பேசுவாரு | RIPVivekh
பல படங்களில்

பல படங்களில்

கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு இன்னமும் தொடங்கப்படவில்லை. தொடர்ந்து நடிகர் விவேக் பல படங்களில் நடித்து வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் திடீரென உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X