வியந்து போன விவேக்.. பெரிய்ய வேலை சார் இது... அப்பப்பா!!!

சென்னை: நடிகர் விவேக் வியந்து போய் ஒருவரைப் பாராட்டியுள்ளார். அது ஒரு விவேக் ரசிகர். அவர் செய்த வேலைக்குத்தான் இந்த ஆச்சரியப் பாராட்டு.

அப்படி என்ன செய்து விட்டார் அந்த விவேக் ரசிகர் என்று நீங்கள் கேட்பது எங்களது காதில் கேட்கிறது. பொறுங்க சார் சொல்றோம்.

அந்த ரசிகர் விவேக் நடித்த படங்களில் அவர் பேசிய பிரபல வசனங்களை வைத்து ஒரு அழகான மாஷ் அப்பை உருவாக்கியுள்ளார். யூடியூபில் அது வைரலாகி வருகிறது.

காரியங்கள் சாத்தியமாகும்

காரியங்கள் சாத்தியமாகும்

ஆழமாக நேசிக்கும் வெறித்தனமான ரசிகர்களால்தான் இதுபோன்ற காரியங்கள் எல்லாம் சாத்தியமாகும். அந்த வகையில் இந்த ரசிகரும் பின்னியிருக்கிறார் விவேக் வசனங்களை வைத்து.

எடிட் செய்து

எடிட் செய்து

விவேக் பேசிய படங்களில் இடம் பெற்ற பிரபல வசனங்கள், முக்கியமான காட்சிகள் உள்ளிட்டவற்றை மெனக்கெட்டு தொகுத்து அதை எடிட் செய்து அழகாக ஒரு படக் காட்சி போல மாற்றியுள்ளார்.

இதுதான் ஹைலைட்.

இதுதான் ஹைலைட்.

ஒரு பாடல் வடிவில் இந்த காட்சிகள் இடம் பெற்றிருப்பதுதான் இங்கு ஹைலைட். அந்த அளவுக்கு தத்ரூபமாக மெனக்கெட்டு செய்துள்ளார் அந்த ரசிகர். இதற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

பாராட்டு விவேக்

இந்த வீடியோவை அந்த ரசிகர் விவேக்குக்கும் டிவிட்டரில் டேக் செய்துள்ளார். இதைப் பார்த்து பலரும் வியந்து போய் பாராட்டி வருகின்றனர். விவேக் பாராட்டமல் இருப்பாரா. பாராட்டிட்டாரே.

எடிட் செய்து

பெரிய்ய வேலை சார் இது! காட்சிகளை தேர்வு செய்து இசை கோர்த்து, முறையாக எடிட் செய்து... அப்பப்பா!!! என்று வியந்து போய் தனது ரசிகரைப் பாராட்டியுள்ளார் விவேக். இதுதான் விவேக்.. ரசிகர்களை உடனுக்குடன் அங்கீகரித்து பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே.

மரம் நட்ட குட்டிப்பையன்

அத்தோடு மட்டுமில்லைங்க. இன்னொரு நல்ல காரியமும் விவேக்கால் நடந்துள்ளது. விவேக்கோட ரசிகர் ஒருவரின் மகன், விவேக் மரம் நடுவதைப் பார்த்து ஈர்க்கப்பட்டு அந்த குட்டிப் பையனும மரம் நட்டுள்ளான். அந்த வீடியோவை ஷேர் செய்து பாராட்டியுள்ளார் விவேக்.

சபாஷ் போடலாமே விவேக்குக்கும், அவரது ரசிகர்களுக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X