செவியில் நுழைந்து இதயம் உறைந்த.. இசைஞானிக்கு இசையால் வாழ்த்து கூறிய விவேக் !

சென்னை : நடிகர் விவேக் இசைஞானி இளையராஜாவுக்கு இசையால் வாழ்த்துக்கூறி, கவிதையில் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினார்.

இசைஞானி இளையராஜாவின் 77வது பிறந்த நாளுக்கு உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்களும் பல திரை பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

மயக்க வைக்கும் இசையால் நம்மை மயங்க வைத்த இசைஞானி இளையராஜா தனது 77வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

காமெடியில் முத்திரை

காமெடியில் முத்திரை

தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துக் கொண்டுள்ள நடிகர் விவேக் அவர்கள் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இன்றுவரை காமெடியில் தனக்கான ஒரு பாதை அமைத்து அதில் வெற்றியும் நல்ல பெயரையும் அனைவரது பாராட்டையும் இன்றும் பெற்று வருகிறார். தற்போது அவர் நடித்த நடித்த தாராள பிரபு படத்தில் வரும் காமெடி காட்சிகள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருந்து வந்த நிலையில், அவர் சமூகத்திற்காகவும் அவ்வப்போது தனது குரலை கொடுத்துக் கொண்டிருப்பவர். இப்போது அவருக்கு மிகவும் பிடித்தமான இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தனது பாணியில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இசைஞானி மற்றும் கலைஞர்

இசைஞானி மற்றும் கலைஞர்

இசைஞானி இளையராஜாவிற்கும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் ஒரே நாளில் அதாவது ஜூன் 3ல் பிறந்த நாள் வருவதால் பல ஆண்டுகளாகவே இசைஞானி தனது பிறந்த நாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடி வருகிறார். அதைப்போல் பல பிரபலங்களும் ஜூன் 2ம் தேதியில் இருந்தே அவருக்கு வாழ்த்து கூறி வருகின்ற நிலையில் ஜூன் 3ம் தேதியான இன்றும் அவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமூக அக்கறை

சமூக அக்கறை

இது மட்டுமல்லாமல் இவர் அப்துல் கலாமின் வார்த்தை கிணங்க பல சமூக தொண்டும் செய்து வருகிறார். மேலும் இவர் ஒரு கோடி மரக்கன்றுகளை நாடு முழுவதும் நட்டு சாதனையும் புரிந்து வருகிறார். இவ்வாறு நடிப்பிலும் சமூக சேவையிலும் எனது பங்களிப்பை தொடர்ந்து அளித்துக்கொண்டு வரும் நடிகர் விவேக் அவர்களுக்கு இசையிலும் மிகப்பெரிய ஆர்வம் உண்டு அதற்கு இந்த ஒரு வீடியோ காட்சியே சாட்சி

விவேக் ஸ்பெஷல்

விவேக் ஸ்பெஷல்

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளுக்கு முக்கியமான திரை பிரபலங்களும் கோடிக்கணக்கான ரசிகர் மக்களும் தனது வாழ்த்துக்களை அள்ளி தெளித்து வரும் நிலையில் நடிகர் விவேக் அவர்கள் இசைஞானிக்கு இப்படி கூட வாழ்த்து சொல்லலாமா என்று நாம் எண்ணிப் பார்க்காத வகையில் தனது வாழ்த்தை இசையாக சொல்லியுள்ளார்.

இசையால் வாழ்த்துக்கள்

இசையால் வாழ்த்துக்கள்

நடிகர் விவேக் தனது வாழ்த்துக்களை இசைஞானி இளையராஜாவுக்கு தனது பாணியில் அவரின் பிரபல பாடலான மேலும் அவர் அதிகம் விரும்பி பல மேடை கச்சேரிகளில் இசைத்த பாடல், ஆட்டோ ராஜா படத்தில் வரும் " சங்கத்தில் பாடாத கவிதை" என்ற பாடலின் இசையை வாசித்து பின் தனது பாணியில் ஒரு குட்டி கவிதையை சொல்லி இசைஞானிக்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ்த்துக்கள் சொல்லி இருந்தார்.

Recommended Video

'தாராள பிரபு' பார்த்துவிட்டு நடிகர் விவேக்கை தாராளமாகப் பாராட்டும் நடிகை! - வீடியோ
இசை வாழ்த்து

இசை வாழ்த்து

செவியில் நுழைந்து இதயம் உறைந்து உணர்விலும் உயிரிலும் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் அவரது இசைக்கும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. என கவிதையுடன் தனது வீடியோவின் முடிவில் வாழ்த்துக்களை சொல்லியுள்ளார். நடிகர் விவேக் சொன்னது போல் இசைஞானி இளையராஜாவும் அவர் இசையமைத்த இசைகளும் நமக்கும் நமக்கு பின்னால் வரும் சந்ததிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள். நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நீ ராஜா கோட்டையில்லே கொடியுமில்லே அப்பவும் நீ ராஜா ராஜா தான் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X