"விஜய் சொன்னதால் அது மந்திர வார்த்தையாகி விட்டது".. பிகில் சிவாஜி சர்ச்சை பேச்சு குறித்து விவேக்!

சிவாஜி பட பாடல் குறித்து தான் தவறாக எதுவும் பேசவில்லை என நடிகர் விவேக் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

Bigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்

சென்னை: சிவாஜி பட பாடலை குறிப்பிட்டு தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19ம் தேதி சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழா தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சர்ச்சை வெளிவந்து கொண்டே இருக்கிறது.

Actor Vivek explains about his speech in Bigil audio launch

விழாவில் பேசிய நடிகர் விவேக், விஜய்யை புகழ்வதற்காக சில விஷயங்களை கூறினார். அதில் முக்கியமானது, நெஞ்சில் குடியிருக்கும் எங்க சனம் வெறித்தனம் என்ற பாடல் குறித்து அவர் பேசியது. அதாவது நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் கடந்த 1960ம் ஆண்டு வெளிவந்த இரும்புத்திரை படத்தில் இடம் பெற்ற நெஞ்சில் குடியிருக்கும் எனும் பாடலை அவர் குறிப்பிட்டு பேசினார். நெஞ்சில் குடியிருக்கும் என சிவாஜி பாடிய போது ஏற்படாத வெறித்தனம், விஜய் வாயில் இருந்து அந்த வார்த்தை வெளிவந்தபோது ஏற்பட்டிருக்கிறது என்றார்.

இதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்துவிட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். ஒரு நடிகரை காக்கா பிடிப்பதற்காக இப்படி பேசுவீர்களா" என சிவாஜி சமூக நலப் பேரவையை சேர்ந்தவர்கள் விவேக்கிற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து டிவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விவேக். தனது பதிவில் அவர், "1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி"நெஞ்சில் குடி இருக்கும்". அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க", என குறிப்பிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பாளையத்தம்மன் படத்தில், சிவாஜியின் பராசக்தி வசனம் இமிடேட் செய்து பேசி நடித்தார் விவேக். அது அவருக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. அதுபற்றி பேசும் போது, தன்னால் சிவாஜிக்கு பெருமை என விவேக் கூறியதாக செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தான் அவ்வாறு பேசவில்லை என்றும், சிவாஜியால் தான் தனக்கு பெருமை என்று தான் கூறினேன் என்றும் விவேக் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X