ரசிகர் பகிர்ந்த ரஜினி ஸ்டைல் வீடியோ.. எல்லா புகழும் ரஜினிக்கே.. விவேக் நன்றி !
சென்னை : நடிகர் விவேக் படங்களில் செய்த அனைத்து ரஜினி ஸ்டைல் காட்சிகளையும் தொகுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர் ரசிகர்கள். இதற்கு விவேக்கும் ட்விட்டரின் வாயிலாக பதிலளித்துள்ளார்.
Recommended Video
நடிகர் விவேக் தன் படங்களில் பல நடிகர்களின் ஸ்டைலை செய்து அசத்தியது உண்டு குறிப்பாக விவேக் பாணி காமெடியில் பிடித்த விஷயம் அதுவும் ஒன்று தான். நடிகர் விவேக் பழம்பெரும் நடிகர்கள் முதல் பல புது நடிகர்கள் வரை பலரது ஸ்டைலில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து இருக்கிறார்.

நடிகர் விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலை பல படங்களில் பின்பற்றி நடித்து அசத்தியுள்ளார். பல காட்சிகளில் ரஜினியை போலவே நடந்தும், ஸ்டைலாக கை அசைத்தும், பேசியும் அசத்தியுள்ளார். இதை அனைத்தையும் சேகரித்த ரசிகர்கள் தர்பார் படத்தில் சண்டை காட்சியின் போது வரும் பின்னணி இசையோடு கலந்து, விவேக் ரஜினி போல நடித்த காட்சிகளையும் தொகுத்து வீடியோ பதிவாக இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
இதை பார்த்த நடிகர் விவேக் எல்லா புகழும் அவருக்கே என்று கூறியுள்ளார் மேலும் அவர் தான் ஸ்டைலுக்கான அரசர் என்றும் குறிப்பிட்டு கூறியிருக்கிறார். இதனை பார்த்த பல ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இந்த பதிவையும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர் .

விவேக் தனது பல படங்களில் நடிகர் ரஜினியின் ஸ்டைலை தேவைப்படும் இடங்களில் பின்பற்றுவதை பல நடிகர்கள் கவனித்து பாராட்டியிருக்கிறார்கள். குறிப்பாக தாராள பிரபு படத்தில் விவேக் அவர்கள் ரஜினி ஸ்டைலை பின்பற்றுவதை கண்ட ஹரீஷ் கல்யாண் படப்பிடிப்பு தளத்திலே விவேக்கை புகழ்ந்திருந்தார்.

நடிகர் விவேக் உட்பட பல நடிகர்களும் ரஜினி ஸ்டைலை பாராட்டுவதும் பின்பற்றுவதும் உண்டு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்று சொல்ல கூடிய தளபதி விஜயே தனது பல படங்களில் நேரடியாக ரஜினி ஸ்டைலை பின்பற்றியிருக்கிறார். பல இடங்களில் ரஜினிதான் தனக்கு பிடித்த ஹீரோ என்றும் கூறியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பலரையும் ரஜினி ரசிகர்கள் கட்டாயம் வாழ்த்துவது உண்டு. கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரீடூ பத்திரிகையாளர்களிடம் பேசி கொண்டிருக்கும் போது தலை வாரியது ரஜினி ஸ்டைலில் இருந்தது என்று பலர் அந்த காணொளியை ரஜினி பட இசைகளுடன் கோர்த்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தனர். அந்த காணொளிகளும் பயங்கரமாக வைரலானது.


Click it and Unblock the Notifications











