பஸ் டே கொண்டாடிட்டீங்களா? நடிகர் விவேக்கை வைத்து அவரையே வேதனைப்படுத்திய நெட்டிசன்ஸ்!

Recommended Video

பஸ் கூரை மீது பஸ் டே அட்டகாசம்...பல மாணவர்கள் கைது!

சென்னை: பஸ் டே கொண்டாட்டம் தொடர்பாக நெட்டிசன்கள் போட்ட டிவிட் நடிகர் விவேக்கை பாதித்திருப்பது அவர் போட்டுள்ள டிவிட் மூலமாக தெரிந்துள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மீண்டும் பஸ் டே கொண்டாடட்டத்தில் ஈடுபட்டு ரகளை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் இடையூறுக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் திரிவதும் பஸ்டே கொண்டாடுவதும் வாடிக்கையாகி விட்டது. பஸ் டே கொண்டாட போலீசார் தடை விதித்துள்ள நிலையிலும் அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர் கல்லூரி மாணவர்கள்.

பொத்தென கீழே விழுந்த மாணவர்கள்

பொத்தென கீழே விழுந்த மாணவர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் சென்னையில் பஸ் டே கொண்டாடினர். பஸ் டாப்பில் அமர்ந்து வந்த அவர்கள், திடீரென டிரைவர் போட்ட பிரேக்கால் பொத்தென கீழே விழுந்தனர்.

சமூக வலைதளங்களில் மீம்ஸ்

இந்தக் காட்சிகள் பதற வைத்தன. பஸ் டே கொண்டாடியவர்களை கண்டுபிடித்து போலீசார் செம காட்டு காட்டியதாக கூறப்படுகிறது. அதனை கிண்டலடித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர்.

பஸ் டே கொண்டாடிட்டீங்களா?

பஸ் டே கொண்டாடிட்டீங்களா?

இந்நிலையில் நடிகர் விவேக்கின் காமெடி சீன் ஒன்றை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்துள்ள நெட்டிசன்கள், அதனை நடிகர் விவேக்கிற்கே ஃபார்வர்டு செய்துள்ளனர். அதில் பஸ் டே கொண்டாடிட்டீங்களா என கேட்டு ஒரு மீமும், கொண்டாடிட்டோம் என்று கூறி ஒரு மீமும் உள்ளது.

விவேக்குக்கு ஃபார்வர்டு

முதல் மீமில் விவேக் அமைதியாக இருப்பது போன்றும் இரண்டாவது மீமில் விவேக் அடிவாங்கி சட்டை கிழிந்திருப்பது போன்றும் உருவாக்கப்பட்டுள்ளது அந்த மீம். இதனை நெட்டிசன்கள் விவேக்குக்கு ஃபார்வர்டு செய்திருந்தனர் நெட்டிசன்கள் . அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விவேக்.

சிரித்து சிந்தியுங்கள்

சிரித்து சிந்தியுங்கள்

அதில் கனத்த இதயத்துடன் சிரித்து சிந்திக்க வேண்டும். யாரோ எனக்கு இதனை ஃபார்வர்டு செய்திருக்கிறார்கள் என கூறியுள்ளார் விவேக். விவேக் வேதனைப்பட்டிருப்பது தன்னை வைத்து மீம்ஸ் போட்டதற்காக அல்ல. இளைய தலைமுறை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடாமல் பஸ் டே கொண்டாட்டம் என நேரத்தை வீணடித்து சீரழிந்து வருவதை நினைத்து வேதனை பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X