என்னை டேக் செய்யாதீர்கள்.. மீறினால் பிளாக் ஆகும்.. நெட்டிசன்களை எச்சரிக்கும் நடிகர் விவேக்!
சென்னை: அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும் தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளுக்கு தன்னை டேக் செய்ய வேண்டாம் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சமூக வலைதளங்களை நல்ல வேலைக்காக பயன்படுத்துபவர்களை காட்டிலும் மற்றவர்களை விமர்சிப்பதற்காகவும் ட்ரோல் செய்வதற்காகவுமே பெரும்பாலான நெட்டிசன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சில டாப் நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் பதிவிடும் கமென்ட்டுகளால் சமூக வலைதளங்கள் அதகளப்பட்டு வருகின்றன.

விவேக் டிவிட்
சமூக வலைதள வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் சம்பந்தமே இல்லாத விஷயத்தில் கூட தங்களுக்கு பிடிக்காத நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் குறித்து மோசமாக பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிளாக் ஆகும்
அதாவது, நண்பர்கள் அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.மீறிச் செய்தால் பிளாக் ஆகும். நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன். ஸ்டே ஹோம் ஸ்டே சேஃப் என பதிவிட்டுள்ளார்.
பால்வாடிஸ்
நடிகர் விவேக்கின் இந்த டிவிட்டை பார்த்த பலரும் அவருக்கு ஆதரவும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். சூப்பர் சார் இதுபோன்ற தரம் கேட்ட செயல் செய்யாதிங்க படிப்பறிவு இல்லா பால்வாடிஸ் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஒருவர் மீது ஒருவர்
ரசிக சண்டையை ஒழிக்க ஏதும் வழி இருந்தா சொல்லுங்க சார்.. உங்களுக்கு புண்ணியமா போகும் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். ஆனாலும் நடிகர் விவேக்கின் இந்த பதிவிலும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள்
தல அஜீத் ரசிகர்கள் எப்போதும் அந்த தரங்கெட்ட செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று கூறுகிறார் நடிகர் அஜித்தின் இந்த ரசிகர். தளபதி விஜய் ரசிகர்கள் எப்போதும் அந்த தரங்கெட்ட செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் விஜயின் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











