உதயாவின் அக்னி நட்சத்திரத்தில் அதிரி புதிரி காமெடி டாக்டராக விவேக்

By

சென்னை: அக்னி நட்சத்திரம் படத்தில் அதிரிபுதிரி காமெடி டாக்டராக நடிகர் விவேக் நடிக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக், பிரபு நடித்து சூப்பர் ஹிட்டான படம், அக்னி நட்சத்திரம். 1988 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் தலைப்பில் இப்போது இன்னொரு படம் உருவாகி வருகிறது.

இதில் உதயா - விதார்த் இணைந்து நடிக்கின்றனர். கிரைம் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சரண் இயக்குகிறார். இவர், மோகன் ராஜா, விஷ்ணுவர்தன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

ஸ்மிருதி வெங்கட்

ஸ்மிருதி வெங்கட்

எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். ஒய்.ஆர்.பிரசாத் இசையமைக்கிறார். படத்தில் நடிகை ஸ்ரீபல்லவி, ஸ்மிருதி வெங்கட் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ஜெய்சன் ஸ்டுடியோஸ் மற்றும் கரிஸ்மாடிக் கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றன.

நண்பா உதயா

நண்பா உதயா

இப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதுபற்றி டிவிட்டரில் பதிவிட்டிருந்த நடிகர் விவேக், நண்பா உதயா உன் 20 வருட முயற்சியில் நானும் தோள் கொடுக்க விரும்பினேன். உன் வெற்றி என் வெற்றி என்று கூறியிருந்தார்.

காமெடி டாக்டர்

காமெடி டாக்டர்

இந்நிலையில் அவர், இந்தப் படத்தில் காமெடி டாக்டராக கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். காமெடி என்றாலும் முக்கியமான கேரக்டர் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.

ஏலகிரியில்...

ஏலகிரியில்...

இந்தப் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஜனவரி 8 ஆம் தேதி ஏலகிரியில் தொடங்குகிறது. அங்கு நடைபெறும் ஷூட்டிங்கோடு படம் நிறைவடைவதாகப் படக்குழுத் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X