நீதி கிடைத்துவிட்டது.. வக்கிரபுத்தி உள்ளவர்களுக்கு ஒரு பாடம்.. என்கவுன்டர் குறித்து நடிகர் விவேக்!
Recommended Video
சென்னை: ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு நடிகர் விவேக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவரின் உடல் கடந்த 28ஆம் தேதி பெங்களூர்- ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பாலத்தின் கீழ் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குற்றவாளிகள் 4 பேர்
திட்டம் போட்டு ஸ்கூட்டரை பஞ்சராக்கி, காட்டுக்குள் தூக்கிச்சென்று பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் 4 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்

பொதுமக்கள் கோரிக்கை
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 4 பேரையும் பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக்கொல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

4 பேரும் என்கவுன்டர்
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு, பெண் மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்தில் வைத்து 4 பேரையும் போலீசார் என்கவுன்டர் செய்துள்ளனர். மருத்துவர் கொலை தொடர்பாக விசாரணை நடத்த அழைத்து சென்றபோது அவர்கள் தப்பியோட முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹேஷ்டேக்குகள்
4 பேரையும் என்கவுன்டர் செய்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் போலீசாரின் பணியை பாராட்டி ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

நீதி கிடைத்துவிட்டது
இந்நிலையில் நடிகர் விவேக், ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, நீதி கிடைத்துவிட்டது. அந்த மருத்துவ சகோதரியின் ஆத்மா சாந்தியடையும்..
பெரிய சல்யூட்
நோய்வாய்ப்பட்ட அனைத்து வக்கிர மனம் கொண்டவர்களுக்கும் இது ஒரு பாடம். இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்த போலீசாருக்கு ஒரு பெரிய சல்யூட் என தெரிவித்திருக்கிறார் விவேக்.


Click it and Unblock the Notifications











