twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் இணைந்த விவேக்!

    |

    சென்னை : 1987 ஆம் ஆண்டு வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான விவேக், ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும், அதன் பிறகு தனது நகைச்சுவை மூலம் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக உருவெடுத்தார்.

    ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த விவேக்குக்கு கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது 'இந்தியன் 2' மூலம் அதுவும் கிடைத்துவிட்டது.

    Actor Vivek join hands with Vijay Sethupathi

    தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் விவேக், நான்காவது தலைமுறையாக வலம் வரும் இளம் நடிகர்களின் படங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், முதல் முறையாக 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் மூலம் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.

    Actor Vivek join hands with Vijay Sethupathi

    வித்தியாசமான வேடங்களாலும், இயல்பான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில், சமீபத்தில் வெளியான 'சங்கத்தமிழன்' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து 'மாமனிதன்', 'லாபம்', 'கடைசி விவசாயி', 'துக்ளக் தர்பார்', தலைப்பு வைக்கப்படாத படம் என்று பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகும் படம் தான் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.வெங்கட கிரிஷ்ண ரோகநாத் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் விவேக் நடிக்கிறார்.

    Actor Vivek join hands with Vijay Sethupathi

    தனது நகைச்சுவை மூலம் மக்களை சிரிக்க வைப்பதோடு, சிந்திக்க வைக்கும் விவேக்கிற்கு சின்ன கலைவாணர் என்ற பட்டத்தையும் ரசிகர்கள் வழங்கியிருக்கிறார்கள். தனது காமெடியில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விவேக்கும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக இணைவதால் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Actor Vivek join hands with Vijay Sethupathi

    காமெடி நடிகராக மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் விவேக் நடித்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படமான 'சொல்லி அடிப்பேன்' படம் பிரச்சினையில் சிக்கி வெளியாகாமல் போய்விட்டது. இதில் சாய சிங் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு 'நான் தான் பாலா' என்ற படத்தில் விவேக் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் தனது காமெடியை ஒதுக்கி வைத்துவிட்டு சீரியஸான கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'வெள்ளை பூக்கள்' என்ற படத்திலும் விவேக் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்ட படமாகும்.

    Actor Vivek join hands with Vijay Sethupathi

    English summary
    Become an actor in Tamil cinema with the 1987 release 'Manathil Uruthi Vendum' Introducing Vivek, who initially played the character roles, but then with his comedy, He became the number one comedy actor in Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X