யோகா கத்துக்க டிரஸ்ஸ கழற்றனும்.. அய்யோ மாஸ்டர்.. பெண்மணிக்கு ஷாக் கொடுத்த விவேக்கா இது?
சென்னை: உலக யோகா தினம் என்று அறிவித்தாலும் அறிவித்தார்கள், அரசியல் பிரமுகர்கள் முதல், சினிமா பிரபலங்கள் வரை, ஆல் ஓவர் இந்தியா, இன்று யோகாசனம் மட்டும்தான் செய்து கொண்டுள்ளார்கள்.
சமூக கருத்துக்களை படங்களில் மட்டுமில்லாம, டிவிட்டரிலும் சொல்லி வரும் நடிகர் விவேக் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? அவரும் கருத்து சொல்லியுள்ளார்.
யோகா
இந்தியா உலகுக்கு அளித்த கொடை யோக சாஸ்திரம். உலக யோகா தின வாழ்த்துக்கள். Me n my yoga master Krishnamurthi sir! இவ்வாறு இன்று ஒரு ட்வீட் போட்டு, தானும் யோகா பயிற்சி பெற்றவர்தான் என்பதை சொல்லியுள்ளார், விவேக்.
டுபாக்கூர் மாஸ்டர்
ஆனால், விவேக், யோகாவை எப்படி ஒரு படத்தில் ஓட்டித் தள்ளினார் என்பது நம்மில் பலருக்கும் நல்லா ஞாபகம் இருக்கும். குரு என் ஆளு என்ற ஒரு படத்தில்தான் இப்படி டுபாக்கூர் யோகா மாஸ்டராக நடித்திருப்பார் விவேக். சிரசாசனம் செய்யத் தெரியும் என்பதை போலவெல்லாம் ஏமாற்றி, அதற்கு தனி டெக்னிக் வைத்து பிழைப்பு நடத்துவார்.

காமெடி
அதாவது தனது காலை தனது தோள் மீது போட்டுக்கொள்வதை போல, யோகா கற்க வந்திருப்போரிடம் காட்டுவார். ஆனால், அந்த கால் பின்னால் படுத்திருக்கும் வேறொருவருடையதாக இருக்கும். இத்தோடு விடுவாரா விவேக், யோகா கற்க வரும் பெண்களையும் சரமாரியாக வம்பிழுத்து கா(ம)மெடி செய்திருப்பார்.

அந்த பக்கம்
இடதுபக்கம் இழுத்து, வலது பக்கம் விடுங்கன்னு டுபாக்கூர் மாஸ்டர் விவேக் சொல்ல, பயிற்சிக்கு வந்து தனது இடது பக்கத்தில் நிற்கும் பெண்ணை இழுத்து வலதுபக்கம் தள்ளிவிடுவார், பயில்வான் ரங்கநாதன். நான் சொன்னது மூச்சப்பா, என சலித்துக்கொள்வார் விவேக்.

டிரஸ்ஸ கழற்றனும்
இப்படியெல்லாம், யோகாவை கலாய்த்தும், ஆபாச வசனங்களுக்கும் பயன்படுத்திய விவேக், நிஜ வாழ்க்கையில், யோகா பயிற்சி பெற்றுவருகிறார் என்றால் நம்ப முடிகிறதா. சினிமாவுல இதெல்லாம், சாதாரணமப்பா என்று நீங்கள் சொல்வது எங்களுக்கும் கேட்கிறது. இருந்தாலும், ஞாபகம் வந்துடுச்சி பாஸ், என்ன பண்றது!

யோகா பயிற்சி
இப்படியெல்லாம், யோகாவை கலாய்த்தும், ஆபாச வசனங்களுக்கும் பயன்படுத்திய விவேக், நிஜ வாழ்க்கையில், யோகா பயிற்சி பெற்றுவருகிறார் என்றால் நம்ப முடிகிறதா. சினிமாவுல இதெல்லாம், சாதாரணப்பா என்று நீங்கள் சொல்லது எங்களுக்கும் கேட்கிறது. இருந்தாலும், ஞாபகம் வந்துடுச்சி பாஸ், என்ன பண்றது!


Click it and Unblock the Notifications











