ஒவ்வொரு ஓட்டும் நமது உரிமை… அதை நாம் விட்டுத்தரக்கூடாது…விவேக் அட்வைஸ்!
சென்னை : சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி நடிகர் விவேக் வாக்காளர்களுக்கு அறிவுரை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாளை சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
வாக்காளர் வாக்களிக்கும் போது வீண் அலைச்சலை தவிர்க்க தங்களுக்கான வாக்குச்சாவடி பாகம் எண் உள்ளிட்டவை குறித்து முதல் நாளே தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

நாளை வாக்குப்பதிவு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடப்பதை ஒட்டி வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை, முதன்முறை வாக்களிக்க செல்பவர்கள் அறிந்துக்கொள்ளும் வழிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காலை 7 முதல் மாலை 7
இது கொரோனா காலம் என்பதால், தமிழகத்தில் முதன் முறையாக வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடையும். தற்போது கொரோனா பரவல் காரணமாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி
100 சதவீகிதம் வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

அனைவரும் வாக்களியுங்கள்
இந்நிலையில், வாக்காளர்களுக்காக நடிகர் விவேக் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், வாக்கு என்பது 5 வருடங்களுக்கு ஒரு முறை நமக்கு கிடைக்கக்கூடிய ஜனநாயக உரிமை, ஒவ்வொரு ஓட்டும் நமது உரிமை, அதை நாம் விட்டுத்தரக்கூடாது. ஒரு வாக்கால் என்ன நேர்ந்துவிட போகிறது என நினைப்பது ஜனநாயகத்துக்கு செய்யும் தீங்கு ஆளுமையை தேர்ந்தெடுப்பது நமது விரல் மை. அதை நாம் மறந்துவிடக்கூடாது. அதனால், அனைவரும் வாக்களியுங்கள் எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











