அன்பு தனுஷ்.. உங்கள் குரலில் உயிர் பெறுகிறது எழுமின் பாடல்! நடிகர் விவேக்..!
சென்னை: நடிகர் விவேக் தனுஷின் குரலில் பாடல் உயிர்பெறுவதாகக் கூறியுள்ளார்.
இயக்குனர் விபி.விஜி இயக்கத்தில் விவேக், தேவையானி, அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் எழுமின்.
இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. கணேஷ் சந்திர சேகரன் இசையமைத்துள்ளார். இப்படம் தற்காப்பு கலையில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இப்படத்தில் எழடா என்ற பாடலை தனுஷும், எழு... எழு என்ற பாடலை அனிருத்தும் பாடியுள்ளனர்.
அதில் எழடா என்ற பாடல் லிங்கை ட்விட்டரில் பகிர்ந்துள்ள விவேக், அன்பு தனுஷ் உங்கள் உணர்வு பூர்வமான குரலில் உயிர் பெறுகிறது எழுமின் பாடல் என பதிவிட்டுள்ளார்.
ஒய் திஸ் கொலவெரி என்று வெறித்தனமான பாடல்களை பாட ஆரம்பித்த தனுஷ், போ இன்று நீயாக... வெண்பனி மலரே... போன்ற பாடலுக்கு பிறகு மிகச்சிறந்த பின்னனி பாடகராகவே மாறிவிட்டார்.
இப்போது எழுமின் படத்திற்காக எழடா.. எழடா என அவர் பாடியிருக்கும் பாடல், சோர்ந்திருக்கும் மகனை ஒரு தந்தை மென்மையாக தட்டி எழுப்புவதுபோல் அமைந்துள்ளது. இப்பாடலை தமிழ்நங்கு எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











