நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்

Recommended Video

நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் திடீர் மரணம்..வீடியோ

சென்னை: நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் நடிகர் விவேக். இவர் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

இவரது பெற்றோர் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆவர். நடிகர் விவேக் பிறந்தது மதுரை ஆகும்.

மக்கள் நலன் சார்ந்து

மக்கள் நலன் சார்ந்து

நுற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் விவேக். பெரும்பாலும் நகைச்சுவை கேரக்டர்களிலேயே நடித்துள்ள இவர், தனது காமெடிகளில் மக்கள் நலன் சார்ந்த கருத்துக்களையே எடுத்துரைப்பார்.

பத்மஸ்ரீ விருது

பத்மஸ்ரீ விருது

இதனால் இவர் சின்னக் கலைவாணர் என்றும் அழைக்கப்படுகிறார். நடிகர் விவேக்கின் சாதனையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

தாயார் காலமானார்

தாயார் காலமானார்

இந்நிலையில் விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று காலாமானார். சென்னை சாலிகிராமத்தில் மகனுடன் வசித்து வந்தார் மணியம்மாள்.

சாலிகிராமத்தில்

சாலிகிராமத்தில்

86 வயதான மணியம்மாள் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை தகனம்

நாளை தகனம்

மணியம்மாள் உடல், இரவு அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளை காலை 10.30 மணிக்கு மணியம்மாளின் உடல் குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்பட உள்ளது.

நேரில் அஞ்சலி

நேரில் அஞ்சலி

தாயாரை இழந்த நடிகர் விவேக்கிற்கு திரைத்துறை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது வீட்டிற்கு சென்று விவேக்கின் தாயரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X