விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!

சென்னை: நடிகர் விவேக்கிற்கு பதில் விவேக் ஓபராய் என மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் விளக்கம் கொடுத்துள்ளார்.

Recommended Video

Trisha, Keerthy Suresh இன்னும் சில பிரபலங்கள் Vivekh உடலுக்கு அஞ்சலி #RIPVivek

தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தீவிர கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது.

விவேக் மரணம்

விவேக் மரணம்

அவரது இதயத்தின் இடது புற ரத்தக்குழாயில் 100% அடைப்பு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்ட பின்னரும் அவரது உடல்நிலையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று காலை நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபலங்கள் அஞ்சலி

பிரபலங்கள் அஞ்சலி

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள விவேக்கின் உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தவறான செய்தி

தவறான செய்தி

சமூக வலைதளங்களிலும் #RIPVivekSir, #விவேக் ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மும்பை ஊடகங்கள் சில நடிகர் விவேக்கின் பெயருக்கு பதிலாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.

பாலிவுட் நடிகர் விளக்கம்

பாலிவுட் நடிகர் விளக்கம்

இதனால் பதறிப்போன நடிகர் விவேக் ஓபராய், தான் நலமுடன் இருப்பதாக டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, நான் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக ஒரு தவறான செய்தி வந்துள்ளது.

விவேக் மரணம் - இரங்கல்

விவேக் மரணம் - இரங்கல்

நான் மும்பையில் உள்ள எனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆனால் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் விவேக் இறந்ததைக் கேட்டு மிகுந்த வருத்தப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X