மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்த்த விவேக்.. திருமணத்தை பார்க்காமலே போன சோகம்!

சென்னை: நடிகர் விவேக் தனது மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில் திருமணம் செய்யாமலேயே உயிரை விட்டுள்ளார்.

Recommended Video

ACTOR VIVEKH FAMILY PRESSMEET | Filmibeat Tamil

நடிகர் விவேக் 1961ஆம் ஆண்டு கோவில்பட்டியை அடுத்த இலுப்பை ஊரணி என்ற கிராமத்தில் பிறந்தார். எம் காம் பட்டதாரியான விவேக், தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வந்தார்.

சினிமா மீது கொண்ட காதலால் அரசு வேலையை உதறிய விவேக் இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

சீர்திருத்த கருத்துக்கள்

சீர்திருத்த கருத்துக்கள்

தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்தார். என்எஸ் கிருஷ்ணனுக்கு பிறகு தனது நகைச்சுவை மூலம் சமுதாயம் சார்ந்த சீர்திருத்த கருத்துக்களை கூறி வந்தார் விவேக்.

மாரடைப்பு

மாரடைப்பு

இதனால் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டு வந்தார். இதுவைர 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெரும் சோகம்

பெரும் சோகம்

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. விவேக்கின் திடீர் மறைவு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூத்த மகளுக்கு மாப்பிள்ளை

மூத்த மகளுக்கு மாப்பிள்ளை

இந்நிலையில் நடிகர் விவேக் குறித்த நெகிழ வைக்கும் தகவல்கள் நாள்தோறும் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் நடிகர் விவேக் தனது மூத்த மகள் அமிர்தநந்தினிக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த தகவல் வெளியாகியுள்ளது.

மகன் மரணம்

மகன் மரணம்

அருள் செல்வி என்பவரை திருமணம் செய்த நடிகர் விவேக்கிற்கு அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, பிரசன்ன குமார் என மூன்று பிள்ளைகள். அவர்களில் மகன் பிரசன்ன குமார் கடந்த 2015ஆம் ஆண்டு டெங்கு மற்றும் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.

மகளுக்கு மாப்பிள்ளை

மகளுக்கு மாப்பிள்ளை

அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது மகள்கள் குறித்து பேசியுள்ளார் நடிகர் விவேக். அதன்படி விவேக்கின் மூத்த மகள் அமிர்தநந்தினி ஆர்க்கிட்டெக்ட்டாக உள்ளார். இரண்டாவது மகள் தேஜஸ்வினி சிட்டி பேங்கில் பணிபுரிந்து வருகிறார்.

திடீர் மரணம்

திடீர் மரணம்

இதில் மூத்த மகள் அமிர்தநந்தினிக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார் விவேக். இந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பாராத வண்ணம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் விவேக்.

இறுதிச்சடங்கு செய்த மகள்

இறுதிச்சடங்கு செய்த மகள்

மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில் திருமணத்தை பார்க்காமலே உயிரை விட்டுள்ளார் விவேக். ஏற்கனவே மகனை இழந்த விவேக்கிற்கு மகன் ஸ்தானத்தில் இருந்து அவரது இளைய மகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: vivek விவேக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X