உன்னை நினைச்சு பாடலின் டியூனை பியானோவில் வாசித்த விவேக்.. வைரலாகும் வீடியோ !
சென்னை : சின்ன கலைவாணர் விவேக், சைக்கோ படத்தில் வரும் உன்ன நினைச்சு பாடலின் டியூனை பியானோவில் வாசித்து அசத்தியுள்ளார். இந்த, வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
நடிகர் விவேக் அதிகமாக படங்களில் பார்க்க முடிவது இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களிலேயே நடித்து வருகிறார். இவர் கடைசியாக பிகில் படத்தில் ஒரு சிறிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். நடிகர் விவேக் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .

இளையராஜா இசையில் சித்ஶ்ரீராம் குரலில் சைக்கோ படத்தில் வரும், உன்ன நினைச்சு என்ற பாடல் மிக பெரிய வெற்றி அடைந்தது. இந்த பாடலின் டியூனை நடிகர் விவேக் அவர்கள் பியானோவில் வாசித்து அசத்தியுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டாகி உள்ளது. விவேக் அவர்கள் இந்த டியூனை மிக அழகாக பியானோவில் வாசிப்பது ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறது. விவேக்கின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சைக்கோ படத்தில் வந்த இந்த பாடல் சித்ஶ்ரீராமின் மற்றொரு ஹிட் என்றே சொல்லலாம். சைக்கோ படம் ஜனவரி 24 வெளியாகி நல்ல வெற்றியை பதிவுசெய்து உள்ளது. படத்தில் உன்ன நினைச்சு பாடல் வரும் இடத்தில் ரசிகர்களின் கூச்சலை கட்டு படுத்த முடியவில்லை என்றே கூறலாம் .

விவேக் அவர்களின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதில் இருந்து பலரும் வாவ் சூப்பர் என்றும் பலர் பல திறமைகள் கொண்ட நாயகன் என்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். விவேக் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் தனது மற்ற திறமையை காட்டியது இதுவே முதல் முறையாகும் .


Click it and Unblock the Notifications











