மே 3ந் தேதி வரை சமூக வலைதளங்களில் வரமாட்டேன்... நடிகர் விவேக் ட்வீட்!
சென்னை : மே 3ந் தேதி வரை சமூக வலைதளங்களில் வரமாட்டேன் என்று நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் பாடல்களை போலவே காமெடியும் ஒரு தனித்துவம்தான். பல வீடுகளில் ஆதித்யா, சிரிப்பொலி போன்ற சேனல்களை பார்க்காத ஆட்கள் இல்லை. அப்படிபட்ட காமெடி என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது கவுண்டமணி செந்தில், வடிவேலு,விவேக் தான்.

அந்த வரிசையில் தற்போது வரை பல காமெடியன்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நினைவில் சட்டென வருவது இவர்கள் தான். அந்த அளவிற்கு பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் இவர்கள். ஓவ்வொருவ ருக்கும் நடிப்பதில் தனி சிறப்பு உண்டு.

அதுபோல நடிகர் விவேக் அவர்களின் காமெடிகளில் சமூக கருத்துக்கள் அதிகமாக இருக்கும் அவரின் நடிப்பும் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும். இவர் முன்பை போல அதிக திரைப்படங்கள் நடிக்கவிட்டாலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடித்த படம் தாராள பிரபு. பொதுவாக சினிமாவையும் தாண்டியு சமூக அக்கறை கொண்டவர் விவேக். மரங்கள் நடுவது,ஏரிகளை தூறு வாருவது போன்ற பல இயற்கை சார்ந்த சேவைகளை செய்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது மே.3 ஆம் தேதி வரை சமூக வலைதளங்களை உபயோகிக்க மாட்டேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். பின் "பர்சனல் ரீசன்" என்று அதற்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார். ஆனால் தெளிவான காரணம் என்ன என்று தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications