வித்தியாசத்தை தேடும் ரசிகர்களுக்கு வெறித்தனமான தீனி.. ஜீவி படம் குறித்து நடிகர் விவேக்!
சென்னை: சமீபத்தில் வெளியான ஜீவி படத்தை பார்த்த நடிகர் விவேக் படத்தை மனதார பாராட்டியுள்ளார்.
ஜீவி படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது இந்த ஜீவி படம்.

இதில் '8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த வெற்றி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடிகளாக அஸ்வினி மற்றும் மோனிகா நடித்துள்ளனர். மேலும் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இந்த படத்திற்கு ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஜீவி படம் குறித்து நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். படம் குறித்தும் இயக்குநரின் துணிச்சலையும் நடிகர் விவேக் மனதார பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஜீவி படம் பார்த்தேன். சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை போகப் போக நம்மை ஆட்கொள்கிறது. வித்தியாசமான படங்களைத் தேடும் ரசிகர்களுக்கு, ஜீவி ஒரு வெறித்தனமான தீனி! இயல்பாக நடிக்கும் ஹீரோ, கவனிக்க வைக்கும் வசனம், துணிச்சலான இயக்குனர்! என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











