அழாத கண்களும் அழும் அற்புத நடிப்பு.. கமல்ஹாசனை தாறுமாறாய் புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனை பிரபல நகைச்சுவை நடிகரான விவேக் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார் விவேக். ஆனால் நடிகர் கமல்ஹாசனுடன் மட்டும் விவேக் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை.

இந்தியன் 2வில்
பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள விவேக், கமல்ஹாசனுடன் மட்டும் இணையாமல் இருந்தது அவருக்கு பெரும் குறையாகவே இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்தியன் 2வில் இணைந்திருக்கிறார்.

விவேக் புகாழராம்
தற்போது லாக்டவுன் என்பதால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தியன் 2 படத்தின்ன படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் நடிகர் விவேக்.

அழாத கண்களும் அழும்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நடிகர் திலகத்திற்குப் பிறகு நம்மை நடிப்பால் கொள்ளை கொண்டவர்
கமல்ஹாசன் சார். பலமுறை பார்த்த தெனாலி படத்தை மீண்டும் பார்த்தேன். அதில் தன் தாய்க்கு நடந்த சோகத்தை சொல்வதை ஒரே ஷாட்டில் நடித்திருப்பார். காமெடியில் ஆரம்பித்து கண்ணீரில் முடிப்பார். அழாத கண்களும் அழும் அற்புத நடிப்பு என தெரிவித்துள்ளார்.

விளாசிய நெட்டிசன்கள்
இதனை பார்த்த பாஜகவின் அகில இந்தி இளைஞரணி துணைத் தலைவர் ஏபி முருகானந்தம், காமெடி பண்ணிட்டீங்களே என்று கமெண்ட் அடித்தார். முருகானந்தத்தின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், அவரை விளாசி தள்ளியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











