வாவ்.. கமலுக்கு விவேக் கொடுத்த பர்த்டே கிஃப்ட்ட பாத்தீங்களா!
Recommended Video
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விவேக் அவருக்கு பிறந்த நாள் பரிசு ஒன்றை வழங்கியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் தனது 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை தொடங்கிய கமல்ஹாசன், தொடர்ந்து நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதுகள், பத்ம விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் என ஏராளமான விருதுகளை குவித்திருக்கிறார்.
கமல்ஹாசன் கடந்த 7 ஆம் தேதி தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனது தந்தைக்கு சிலை திறந்தார் கமல்ஹாசன்.

பாலச்சந்தருக்கு சிலை
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் குடும்பத்தினரும் திரைத்துறையை சேர்ந்த நெருங்கிய நண்பர்களுடன் கலந்துகொண்டனர். அடுத்த நாளே சினிமாவில் தன்னுடைய தந்தை ஆசான் என்று கூறும் இயக்குநர் பாலச்சந்தருக்கு தான் புதிதாக திறந்த ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் சிலை வைத்தார்.

வாழ்த்து
இதில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் பலரும் கலந்துகொண்டனர். கமலின் பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அன்புப் பரிசு
அந்த வகையில் நடிகர் விவேக், கமல்ஹாசனுக்கு தான் அதிகம் நேசிக்கும் அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விவேக், கலையுலக வானில் இருந்து...சமுதாய வாழ்வுக்கு.. சிறகு விரிக்கும் தங்களுக்கு இந்த அக்கினிச் சிறகுகள்.. என் அன்புப் பரிசு என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் 2வில்...
நடிகர் விவேக் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள விவேக், கமல்ஹாசனுடன் மட்டும் இணையாமல் இருந்தார். அது அவருக்கு பெரும் குறையாகவே இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியன் 2வில் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











