twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்மஸ்ரீ முதல் எடிசன் அவார்டு வரை.. விருதுகளை குவித்த 'சின்னக் கலைவாணர்' விவேக்.. மொத்த லிஸ்ட்!

    |

    சென்னை: மறைந்த நடிகர் விவேக் பத்மஸ்ரீ விருது முதல் எடிசன் அவார்டு வரை பல்வேறு விருதுகளை குவித்துள்ளார்.

    Recommended Video

    பகுத்தறிவை நாட்டவர் Vivek | Actor Vairamuthu About Vivek | RIP Vivek

    இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விவேக். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்… விவேக்கை உச்சாணிக்கொம்பில் ஏற்றி விட்ட வசனம் !இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்… விவேக்கை உச்சாணிக்கொம்பில் ஏற்றி விட்ட வசனம் !

    ரஜினி, விஜய், அஜித், மாதவன், தனுஷ், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி என டாப் ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார் நடிகர் விவேக்.

    சிந்தனையை ஊட்டி

    சிந்தனையை ஊட்டி

    அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக்கொண்ட நடிகர் விவேக் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் திகழ்ந்தார். தனது நகைச்சுவை மூலம் சிரிப்பையும் சிந்தனையையும் ஊட்டிய நடிகர் விவேக் திரைத்துறையில் தான் புரிந்த சாதனைகளுக்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.

    தமிழக அரசின் மாநில விருது

    தமிழக அரசின் மாநில விருது

    1999ஆம் ஆண்டு உன்னருகே நானிருந்தால் திரைப்படத்திற்காகவும், 2002 ஆம் ஆண்டு ரன் படத்திற்காகவும், 2003ஆம் ஆண்டு பார்த்திபன் கனவு, 2005ஆம் ஆண்டு அந்நியன், 2007ஆம் ஆண்டு சிவாஜி படத்திற்காகவும் தமிழ்நாடு அரசின் மாநில விருதை பெற்றுள்ளார் நடிகர் விவேக்.

    ஃபிலிம் பேர் விருது சவுத்

    ஃபிலிம் பேர் விருது சவுத்

    2002ஆம் ஆண்டு ரன் படத்திற்காகவும், 2003ஆம் ஆண்டு சாமி படத்திற்காகவும், 2004 ஆம் ஆண்டு பேரழகன் படத்திற்காகவும் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதுகளை பெற்றார் நடிகர் விவேக்.

    சர்வதேச தமிழ் பட விருது

    சர்வதேச தமிழ் பட விருது

    2003ஆம் ஆண்டு ரன் திரைப்படம், 2004 ஆம் ஆண்டு சாமி திரைப்படம், 2008ஆம் ஆண்டு குருவி படம், 2011ஆம் ஆண்டு வெடி ஆகிய படங்களுக்காக சர்வதேச தமிழ் பட விருதுகளை குவித்தார் நடிகர் விவேக்.

    எடிசன் அவார்டு

    எடிசன் அவார்டு

    மேலும் 2009ஆம் ஆண்டு ஸ்பெஷல் ஜூரி அவார்டு, பல்வேறு படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகர் ஆகிய ஏசியாநெட் பிலிம் விருதுகளை பெற்றார். 2007 ஆம் ஆண்டு குரு என் ஆளு படத்திற்காக எடிசன் அவார்டை பெற்றார் நடிகர் விவேக்.

    பத்மஸ்ரீ விருது

    பத்மஸ்ரீ விருது

    தமிழ் சினிமாவில் அவரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு நடிகர் விவேக்கிற்கு கலைவாணர் விருது வழங்கியது. 2009ஆம் ஆண்டு மத்திய அரசு சினிமாத்துறையில் அவரது சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சத்தியபாமா பல்கலை கழகம் நடிகர் விவேக்கிற்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

    English summary
    Actor vivek received awards and honors. Central govt honored Vivek by Padma Shri award for his contributions in Indian Cinema. Also Vivek has received lots of awards for his performance in movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X