தல தளபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்: நிறைவேற்றுவார்களா ரசிகர்கள்?
Recommended Video

சென்னை: நடிகர் விவேக் ரஜினி, அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விவேக், தேவயானி நடித்துள்ள படம் எழுமின். தற்காப்பு கலையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று ரிலீசாகியுள்ள எழுமின் திரைப்படத்தில் அழகம்பெருமாள், பிரேம், பசங்க சிவகுமார், விஜய் ஆனந்த், சுபகீதா மற்றும் பலர் நடித்துள்ளனர். விபி.விஜி தயாரித்து இயக்கியுள்ளார்.

இப்படம் பற்றி ட்வீட் செய்துள்ள நடிகர் விவேக், ரஜினி, அஜித் மற்றும் விஜய்யுடன் நடித்த புகைப்படங்களை பதிவிட்டு, நான் தலைவர், தல, தளபதியோடு நடித்தபோது நீங்கள் தந்த ஆதரவை இப்போது மாணவர்களுக்காக நான் நடித்திருக்கும் எழுமின் படத்திற்கும் தருக ரசிகப் பெருமக்களே என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு ரசிகர்கள் பலரும் நிச்சயமாக எழுமின் படத்தை திரையரங்கில் பார்ப்போம் சார் என்று உறுதியளித்து வருகின்றனர்.
சண்டக்கோழி 2, வட சென்னை போன்ற பெரிய படங்கள் ரிலீஸாகியிருப்பதால், எழுமின் படத்திற்கு அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











