நீங்கள் மரம் நட்டது வேஸ்ட் என்றவருக்கு நெத்தியடி பதில் கொடுத்த நடிகர் விவேக்!
நீங்கள் 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டது வேஸ்ட் என்றவருக்கு நடிகர் விவேக் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: நீங்கள் 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டது வேஸ்ட் என்றவருக்கு நடிகர் விவேக் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
சின்ன கலைவாணர் என்றழைக்கப்படும் நடிகர் விவேக் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளில் மரம் நடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் விவேக்.

இந்நிலையில் கார்த்திகேயா என்பவர் நடிகர் விவேக்கின் டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதாவது, நீங்கள் நட்ட மரத்தில் ஒரு பத்து லட்சம் வளர்ந்து இருந்தாலே நாடு காடு மாதிரி இருந்து இருக்குமே.30லட்சம் மரம்நடுறது வேஸ்ட் ஒரு மரம் நட்டாலும் அதை நல்ல வளர்க்கணும். என கூறியுள்ளார்.
அதற்கு நடிகர் விவேக் மிகவும் கூலாக நச்சென பதிலடி கொடுத்துள்ளார். உங்கள் நல் எண்ணத்தின் முன் தலை வணங்குகிறேன். ஏதோ என்னால் முடிந்ததை செய்கிறேன். நீங்கள் இது வரை எத்தனை மரம் நட்டீர்கள் சார்? என்று கேட்டுள்ளார் விவேக்.


Click it and Unblock the Notifications











