twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறைந்த நடிகர் விவேக்கின் பிறந்தநாள் இன்று... நினைவுகூர்ந்த பிரபலங்கள்

    |

    சென்னை : நடிகர் விவேக் கோலிவுட்டின் சிறப்பான காமெடி நடிகராக போற்றப்படுகிறார்.

    சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்ட இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார்.

    மிரட்டலான அரண்மனை 3 படம்... இன்று ஓடிடியில் ரிலீஸ்! மிரட்டலான அரண்மனை 3 படம்... இன்று ஓடிடியில் ரிலீஸ்!

    இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளையொட்டி அவரை பிரபலங்கள் பலர் நினைவுகூர்ந்துள்ளனர்.

    நடிகர் விவேக்

    நடிகர் விவேக்

    நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களின் பாராட்டுக்குரியவராக இருந்தார். கோவில்பட்டியில் பிறந்த இவர், இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்களை கொண்டிருந்தார். காமெடியிலும் சீர்திருத்த கருத்துக்களை புகுத்த முடியும் என்பதை நிரூபித்தார்.

    பாலசந்தர் அறிமுகம்

    பாலசந்தர் அறிமுகம்

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த போது மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் இயக்குநர் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அதன்மூலம் சினிமா வாய்ப்புகளை பெற்றார். மனதில் உறுதி வேண்டும் இவரது அறிமுக படமாக அமைந்தது. தொடர்ந்து புதுப் புது அர்த்தங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

     பிரபலமான காமெடி டயலாக்குகள்

    பிரபலமான காமெடி டயலாக்குகள்

    இவரது பல காமெடி டயலாக்குகள் ரசிகர்களிடையே பிரசித்தம். இன்னிக்கு செத்தா நாளைக்கு பால், எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் உள்ளிட்ட டயலாக்குகள் தற்போதும் மீம்ஸ்களாக உலவி வருகின்றன. தன்னுடைய கேரக்டர்களின் மூலம் ரசிகர்களிடையே நல்ல கருத்துக்களை தொடர்ந்து பேசி வந்தார்.

    மரங்களை நட்டு சமூகப்பணி

    மரங்களை நட்டு சமூகப்பணி

    பிலிம்பேர், தமிழக அரசு விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவர். அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு கோடிக்கணக்கான மரங்களை நட்டு சமூக பணியிலும் ஈடுபட்டு வந்தார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்தார்.

    மிகப்பெரிய இழப்பு

    மிகப்பெரிய இழப்பு

    இவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நமது வீட்டில் ஒருவரை இழந்த சோகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. ரசிகர்களை சிரிக்க மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்த விவேக்கின் மரணம் சினிமா துறைக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

    60வது பிறந்தநாள்

    60வது பிறந்தநாள்

    இந்நிலையில் இன்றைய தினம் அவரது 60வது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள், சக நடிகர்கள் தங்களது நினைவுக் கூறலை வெளிப்படுத்தியுள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனமும் விவேக்கை நினைவு கூர்ந்துள்ளது. எப்போதும் நமது நினைவில் அவர் இருப்பார் என்றும் சின்ன கலைவாணர் என்றும் தெரிவித்துள்ளது.

    English summary
    Actor Vivek's 60th birthday today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X