ஏ.. நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.. ஆவாஸ் அஞ்சிங்.. விவேக்கையே கலாய்ச்சுட்டாங்களே!
சென்னை: சீன பொருட்களை புறக்கணியுங்கள் என்று குரல் ஓங்கி ஒலித்து வரும் நிலையில் நடிகர் விவேக்கின் நகைச்சுவை காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சீனப்படைகளின் அத்துமீறிய தாக்குதலால் இந்திய ராணுவ வீரர்கள் 20 போர் வீர மரணமடைந்தனர்.
சீனப் படையை சேர்ந்த 35 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சீனப் படையின் அத்துமீறிய தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவேக் காமெடி
இதனால் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் சீனாவுக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகின. இந்நிலையில் நடிகர் விவேக்கின் நகைச்சுவை காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

உங்களுக்கு நூடுல்ஸ்னா..
அதில் தன்னை காதலிக்கும் சீன பெண்ணின் காதலை புறக்கணிக்கும் விவேக், உங்களுக்கு நூடுல்ஸ் என்றால் எங்களுக்கு புளியோதரை, பிரிட்ஜ் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடியே புளியோதரை செஞ்சு 5 நாள் வச்சு சாப்பிட்டவங்க நாங்க என கெத்து காட்டுகிறார்.

முன்னுதாரணமாய்
இந்த காட்சியை ஒரு ரசிகர் ஷேர் செய்துள்ளார். மேலும், சீன பொருட்களை புறக்கணிப்போம் என்று இப்பதான் ஆரம்பிச்சுருக்காங்க! ஆனா சீனா பொண்ணையே புறக்கணிச்சு அப்பவே முன்னுதாரணமாக திகழ்ந்தவர் எங்கள் விவேக் என குறிப்பிட்டுள்ளார்.

ஆவாஸ் அஞ்சிங்
இதனை பார்த்த நடிகர் விவேக், எங்க இருந்து சார் இப்புடி புடிக்ரீங்க!? ஆனா ஒன்னு, அப்புறம் அந்த சீனா பெண்னை தேடி அலைந்து ஆவாஸ் அஞ்சிங்னு நாய் கிட்டே கடி வாங்கின சீன்லாம் இருக்கே சார்!!!! என பதிலுக்கு கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











